Friday 21 June 2013

கூழாங்கல் வைரம்

ஒரு அதிபழைய அருங்காட்சியகம். ஆண்ட்ரூ அங்கு தான் கடந்த 32 வருடங்களாய் பாதுகாப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அன்று காலை அருங்காட்சியகம் சென்று பார்த்தால் முந்தின இரவில் கடும் தீயால் மிகவும் சேதப் பட்ட நிலையில் அந்த பங்களா.
ஆண்ட்ரூ அங்குமிங்கும் ஓடி ஏதெங்கிலும் காப்பாற்றப் பட கிடைக்குமோ எனத் தேடிப் பார்த்தார். ஒரு மூலையில், இடிபாடுகளுக்கிடையில் பாதி எரிந்த நிலையில் ஒரு பழைய புத்தகம் கிடைத்தது.
எடுத்துக் கொண்டு மாலை வீட்டில் சென்றதும் அதை புரட்டினார். என்ன ஆச்சரியம்! அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது, “ஊருக்கு வெளியே இருக்கும் மலை முகட்டில் கொட்டிக் கிடக்கும் கூழாங்கற்களில் ஒன்று வைரமென்று”.
ஆண்ட்ரூவிற்க்கு மனது அமைதி கொள்ளவில்லை. யாரிடமும் சொல்ல விருப்பமில்லை. கூழாங்கல் அளவிற்கு வைரம் கிடைத்தால், எத்தனை கோடி பெறும்! தன் சந்ததியெல்லாம் மகிழ்ந்து வாழலாமே என்ற எண்ணத்தில் அடுத்த நாள் காலை முதல் தேடுதல் வேட்டையை தொடங்கினார்.
போய் மலை முகட்டில் அமர்ந்து ஒவ்வொரு கூழாங்கல்லாய் எடுத்து வைரமா எனப் பார்த்து, இல்லையென்று கடலுக்குள் வீசிக் கொண்டிருந்தார். காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நாளும், இடை விடாது...
நாட்கள் கடந்தன. ஆண்ட்ரூவிர்கும் சோர்வு எடுத்தது. எனினும் விடாமல் செய்து கொண்டிருந்தார்.
அன்று மாலை, ஒரு கூழாங்கல்லை வழக்கம் போல் எடுத்துப் பார்த்து விட்டு, தூக்கி கடலில் போட்டார். திடுக்கிட்டார். அய்யோ, அது வைரமன்றோ!
(வாழ்வில் நமக்கும் எத்தனையோ வாய்ப்புகள், காலிலும், கையிலும், முகத்திலும் இடறிப் போகின்றன. கவனமின்றி எல்லா வாய்ப்புகளைப் போன்றே இதுவும் என விட்டுப் போவது, ஒரு பெரிய வைர வாய்ப்பாய் இருக்கக் கூடும். எந்த வாய்ப்பையும் ஊதாசீனப் படுத்தாமல் கவனிப்பது நல்லது.)

No comments:

Post a Comment