Thursday 6 June 2013

உண்மைக் காதல்

பள்ளிக்கூட வாசலில்
தள்ளு வண்டி விற்கும் அவன்,
தட்டுக் கூடையில்
கொய்யா விற்கும் அவள்.
உடல் கறுத்தும்
உளம் வெளுத்த அவர்கள்,
வாழ்வியல் துன்பங்கள் மறந்து
சூழ் நிலை துயரங்கள் தொலைத்து
இன்பத்தின் வாசலை
எட்டிப் பார்க்கும் அவர்கள் காதல்.
இணைந்து வாழ்ந்தால்
துன்பங்கள் தொலையுமா?
தெரியாது.
பிரிந்து போனால்
இன்பங்கள் மறையுமா?
கிடையாது.
அவர்கள் உள்ளத்தில்
உள்ளதென்ன?
இணைந்து வாழ்வோம்.
இன்பத்திலும் துன்பத்திலும்
பங்கு கொள்வோம்.
துன்பத்தில் உன் தோளாய் நான்,
இன்பத்தில் என் இதழாய் நீ.
உடற்பசியில் இல்லாது
இருப்போமே உண்மையாய்
உணர்விலும்.....!

No comments:

Post a Comment