Thursday 6 June 2013

சினம் ஏன்?

வெள்ளுடை தேவதை
தன் நிலை மறந்து
என்மீது சினம் கொண்டதேன்?
காத்திருக்கும் நிமிடங்கள்
காதலில் சுவையென்று அறியாயோ?
வாதிட்டு வெல்வதற்கு நான்
வரவில்லை உணராயோ?
பூவிற்கும் சிறுமொட்டு
நமைக் கண்டு நகைக்கிறதே,
கனிவிற்கும் குறும்பொன்று
கனைக்கிறதே!
வா கண்ணே!
அலைகடலில் கரை தொட்டு
இசை படிப்போம்.
உனை பற்றும் என் கைக்கு
உயிர் கொடுப்போம்
வெல்லக் கட்டி வா!
எனை வெல்லும் சுட்டி வா!
குளிர்காற்று உனைக் கொள்ளட்டும்,
உன் மூச்சின் வெப்பம் தணியட்டும்!
உனக்கென தைத்த என்
உடல் சட்டையை
இட்டுக்கொள் தேவி!
இன்பத்தின் மறு பெயரன்றோ நீ!

No comments:

Post a Comment