Thursday, 25 July 2013

நீர்குமிழி



நீர்குமிழி வாழ்க்கை
நிஜமென்னும் மாயை,
தொலைதூரப் பயணம்
தொடுவானம் போல,

புரியாத புதிரைப்
புரிந்ததாய் நடப்போம்,
விடியாத இரவை
விடிந்ததாய் நினைப்போம்.

உறவென்றும் பிரிவென்றும்
உணர்வுகளை வளர்ப்போம்.
புறம் தந்த வேதனையில்
அகம் தன்னை இழப்போம்.

கனவுக்குள் வாழ்ந்து
கனவுக்குள் செத்து
கதை சொல்லுமுன்னர்
குமிழாகி யுடைவோம்.

எதற்கிந்த வாழ்க்கை
எதற்கிந்த பயணம்,
விளக்கங்கள் சொல்லும்
விடைக் காண்பதெங்கே?

2 comments: