Monday 5 August 2013

பெருமிதம்

பெருமிதம் கொள்ளுங்கள்,

எத்தனை இடர்பாட்டுக்கு நடுவே, எத்தனை இன்னல்களைத் தாண்டி, ஏளனங்களைக் கடந்து, சாதனைகளைச் செய்யும் இவர்களை நாம் இருவிழிகளால் மட்டுமல்லாது, உள்ளத்தாலும் உயர்ந்த பார்வையோடு பார்த்து, இந்த சாதனையாளர்களை மேலும் ஊக்கப் படுத்தியும், இவர்களைப் போல் சாதனைப் படைக்க இன்னும் ஏராளமானோர் இனம் கண்டு கொள்ளப் படாமல் இருப்பதை அறிந்து அதற்கான ஆவனச் செய்து உண்மையான மகிழ்வைக் கொண்டாடுவோம்.
பெண்ணுரிமை வெறும் வார்த்தைகளாய்ப் பேசி விட்டுப் போவதல்ல. மதிப்பளித்து, தோல்விகளில் தோள் கொடுத்து, வெற்றிகளில் மனமார மகிழ்ந்து, உயர்வதற்கு நம் கரம் கொடுப்பதுதான்.
தூசிப்போரை இகழ்ந்து, நேசிப்போரை உணர்ந்து, உண்மையின் உருவம் கண்டு மகிழ்வோம்.
நிகழ்வு 1) ஜார்கண்ட் சிறுமிகள் 14 வயதிற்குக் கீழானவர்களுக்கான உலக அளவிலான கால்பந்து போட்டியில், ஸ்பெயின் நாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றனர். அவர்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் கேவலப்படுத்தப்பட்டு, ஸ்பெயினில் போய் பயிற்சி நேரங்களில் வெறும் கால்களுடன் ஆடி, வெண்கலப் பதக்கம் வென்று உலகத்தின் பார்வையை தம்மேல் திருப்பியுள்ளனர்.
நிகழ்வு 2) பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி விளையாட்டுப் போட்டியில், இங்கிலாந்து நாட்டில் விளையாடி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இவையிரண்டும் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள். நமக்குத் தெரியாத எத்தனையோ சிறுமிகள் இந்த தேசம் முழுதும் சிதறிக் கிடக்கிறார்கள், நாம் தான் கண்டு பிடித்து, சாதனையாளர்களாக்க வேண்டும். செய்வோமா?

No comments:

Post a Comment