Monday 5 August 2013

பேராசை

அனைத்தையும் தந்தான் 
அவளிடத்தில்,
அவனையும் சேர்த்துத்தான்,
அப்படியும் திருப்தி இல்லை
அவளுக்கு,
பேராசைப் பிடித்தாள்
பேய் போலத் துடித்தாள்,
கணவனை கடனாளியாய்

கண நேரமும்
அனுமதியாமல்
அரித்தாள்.
தவறு செய்ய
திணித்தாள்.

பாவம் அவன்,
பரிதவித்தான்.
பெற்றோரும் இல்லை,
உடனிருந்தோரெல்லாம்
உடன் கொல்லும் தொல்லை.

பேசத் துடித்த வார்த்தைகளெல்லாம்
மௌனத்தில் மென்று
நீர் குடித்தும்
நிலை இல்லாமல் தவித்தான்.
மனதின் எண்ணங்களை
மொழியாக்கம் செய்ய
வழியின்றி துடித்தான்.

ஒவ்வொரு நாளும்
உற்சாகமின்றி
வீட்டிற்கு வருவதை
வெறுத்தான்.

துணையற்ற வாழ்வை
துரிதம் தேடினான்.
குடியை வெறுத்ததால்
இனிய கனவுகள்
இவனை வெறுத்தன.
கனவுகளே வேண்டாமென்று
உறக்கத்தை
இவன் வெறுத்தான்.

ஒரு நாள்
உறக்கம் அவனை
ஒரேயடியாய்
ஆட்கொண்டது.
எனினும் அந்த பெண்மணி
அவன் கொண்டு வந்த பணத்தை
இனியும்
எண்ணிக்கொண்டே இருக்கிறாள்.
(பி.கு., இப்படியும் சில பெண்கள் உண்டன்பதை என் உறவினர் வீட்டில் தெரிந்து கொண்டேன்

No comments:

Post a Comment