பள்ளிக்காலங்கள்
சுமை மறந்து
பறந்த பொழுதுகள்.
எக்காலமும்
எக்காளமும்,
முக்காலமும்
சந்தோழஷமும்...
வானத்தில் பறக்கின்ற
பறவைக்கு
வெயிலில்லை,
மழையில்லை..
எங்களுக்கும் தான்.
சுட்டாலும்,
பட்டாலும்,
சுவையற்றுப் போனாலும்,
வெட்கங்கள் களைந்து
ஒன்றாக புசிப்போம்.
கனவில் கூட
கட்டிப் புரண்ட
சண்டையில்லை.
ஒரு வீட்டில் உண்டாலும்
ஊர் சுற்றித் திரிந்தாலும்,
விளையாடிப் பறந்தாலும்
விதமொன்றாய் இருந்தாலும்
நட்பால் இணைந்தோம்.
கவலைக் கொண்டால்
சேர்ந்தே அழுவோம்.
மகிழ்ச்சி வந்தால்
ஒன்றாய் மலர்வோம்.
காட்சிப் பெட்டியிலும்
கண்ணித் தட்டியிலும்
நாட்டம் அதிகமில்லை.
நட்பே வாச முல்லை.
காலம் கலைத்த கூடாய்,
கவலை தோய்ந்த சுவடு பூண்டு
நட்பைத் தோலைத்து,
நாட்கள் களைந்தோம்.
முக நூலின் மூலம்
நட்பின் முகவரி
மீண்டும் கண்டதாய்
மகிழ்சியோ மகிழ்ச்சி.
ஒவ்வொரு நாளும்
புதிய பதிவுகள்,
புதிய கொணங்கள்,
புதிய அலசல்கள்,
மனதில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் பிறக்கின்ற
உணர்வுகள்.
நன்றி என் தோழமைகளே!

No comments:
Post a Comment