அன்பின் இருப்பிடமே
காதல் பிறப்பிடமே
அர்த்தமுள்ள வாழ்வை
அளித்து மகிழ்பவளே.
தும்மல் இட்டாலும்
துடிப்பேன் அறியாயோ?
விசும்பல் கேட்டாலோ
வெடிப்பேன் உணராயோ?
வீசும் காகிதமாய்
வீணில் பறந்தவனை
விண்ணைத் துடைத்தெடுத்து
வண்ணம் கொடுத்தவளே!
தொற்றும் மகிழ்வதனைப்
பற்றிக் கொள்பவளே,
அற்றம் அற்ற நம்
அன்பை நினைவில் கொள்.
நட்பின் வழியொழுகி
நெஞ்சம் நிறைத்தவளே!
நெஞ்சம் நிறைந்த என்
நண்பர்தின நல் வாழ்த்துக்கள்!

No comments:
Post a Comment