Friday, 2 August 2013

மூழ்கலானேன்






















அக முத்தை மறைத்து
புற முத்தை நிறைத்து
விழியம்பு தொடுத்து
விளையாட வந்தாள்.

இதழ் தந்த சுவையில்
இசை கண்ட பேச்சில்
இவள் கொண்ட மூச்சில்
இமை வாளின் வீச்சில்

நுதல் உண்ட நிலவின்
குழல் மின்னும் ஒளியில்
எனை மீட்க நாடி

இனும் மூழ்க லானேன்.

No comments:

Post a Comment