Friday, 2 August 2013

புலிப் பார்வை















சுழல் கொண்ட பூமி
சுற்றிவரும் காற்று
புயல் போல நெஞ்சில்
பலம் கொண்ட வீச்சு
மழைக் கால மேரு
தரும் ஊற்றைப்போல
உனைக் கண்ட எந்தன்
உளம் வீர னாச்சு.

களம் கண்ட வீரம்
கனல் போல ஏறும்.
அனல் வீச்சி லந்த
அலைக் கூட மாயும்.
சினம் கொண்ட எந்தன்
புலிப் பார்வை யுந்தன்
விழி யம்பு தைக்க
விளைவென்ன ஆகும்?

தமிழ் பெண்ணின் கண்கள்
தளையற்ற வீரம்
தழைத்தோங்க செய்து
அனல் ஓங்கச் செய்யும்.
அதைப் போல உந்தன்
கயல் கண்கள் கண்டு
அகம் கூட வீரச்
சுரம் கூடலாகும்.

அகங்காரம் கொண்ட
கொடியோனை வெல்ல
அனல் வீசு முந்தன்
விழியம்பு கொண்டு
மதயானைக் கொல்லும்
அரிமாவைப் போல
கதம் செய்து கொன்று

சினம் ஆற்றி வருவேன்.

No comments:

Post a Comment