Wednesday 23 September 2015

மறையூர் மு.பொ.மணியின் பாக்கள்



அன்பு நண்பரான இவர் சற்றேறக்குறைய ஒன்றரை வருடங்களாக என்னுடன் நட்பில் உள்ளார். எளிமையாக பழகும் குணமுடைய நல்ல நண்பர். அதிகம் பேச மாட்டாரோவென நினைத்தால் அவரது கவிதைகள் அழுத்தமாக பேசிவிடுகின்றன
தினசரி பதிவுகள் இடுவதில்லை. ஆனால் பதிவிடும் ஒவ்வொரு கவிதையும் பலகாலம் மனதில் நிற்குமளவு இருக்கும். இவர் தொடாத சமூக சிந்தனை இல்லையோவென நினைக்கத் தோன்றுகிறது. அன்பு, பாசம், காதல், பெண் சிசுக்கொலை, பாலியல கொடுமை, இயற்கையை சீரழிப்பதற்கு எதிராக, என பல்வேறு துறைகளிலும் கவியெழுதி நம்மை கவர்ந்திழுக்கிறார்.
பல படைப்புகள் பத்திரிகைகளில் வந்திருப்பதாகவும் அறிகிறேன்
அவள் உடுத்தும்
ஆடையிலும் மாம்பழ
வண்ணமிருக்கவேண்டும்..
என்ன சட்டை
வேண்டுமென்றால்
https://www.facebook.com/photo.php?fbid=652389208194071&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் மழலையின் மாறும் விருப்பங்களை சொல்லி அதனழகை நமது மனதில் கொஞ்சச் செய்கிறார்
இவ்வுலகில் அழகென்று
நீயும் நானும் மட்டும்தான் !
ஆழ்கிணற்று மணலாய்
புதைந்துகிடந்த என்னை
உன் உள்ளங்கையிலெடுத்து
கோபுரமாக்கினாய் !
https://www.facebook.com/photo.php?fbid=655433257889666&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையில் தனை உயர்த்தி அழகுபார்க்கும் உன்னதமானவளின் உள்ளம் பேரழகு என சொல்லி தானும் அவளும் தான் உலகில் தமக்கு அழகென மொழிந்து அசரவைக்கிறார்.
மூன்றாவதும் பெண்சிசுவானால்
கருவிலே கலைத்துக் கொள்(ல்)
விரதமிருந்து கடவுளை
நெய்யால் குளிப்பாட்டும்
அவன் வாயிலிருந்து வரும்
அருள்வாக்குச் சொல்தான் இது !
https://www.facebook.com/photo.php?fbid=589140724518920&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையில் ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்து எழுதிநமது உள்ளத்தை உலுக்குகிறார். நான் இக்கவி குறித்து ஒன்றும் சொல்லப் போவதில்லை. நீங்களே படியுங்கள். படித்துவிட்டு இறுதி வரியை நீங்களே உரக்கச் சொல்வீர்கள்
அழகாய் புன்னகைப்பாள் மாதவி
இருபுறம் குழி விழுகையில்
யார் காணினும் அள்ளிக்
கொள்ளத்தான் தோன்றும்
மழலை மாறா முகம்...
https://www.facebook.com/photo.php?fbid=617346608364998&set=a.124598884306442.16346.100002689947615&type=1
எனும் இக்கவிதையை நான் படித்து முடித்தபோது சில நாட்கள் என் மனதை விட்டு பாரம் விலகவேயில்லை. இன்னமும் கூட படிக்கும்போதெல்லாம் மனம் துடிக்கிறது, ம்ம்,

அற்புதமான கவிஞர். நாம் அனைவராலும் அறியப்படவேண்டிய போற்றப்படவேண்டிய கவிஞர். அன்பு நண்பர்களே, தோழிகளே, நண்பர் மேலும் மேலும் சிறப்பாக எழுதி உலகப் புகழ் பெற வேண்டுமென வாழ்த்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்

1 comment:

  1. மிக்க நன்றி நண்பரே. உங்களை எதிர்பார்க்கிறேன் முக நூலில்

    ReplyDelete