Friday 18 September 2015

வேதனையின் ஒரு பகுதி


















என்னுள்ளம்
படபடவென அடித்தது
கைகால்கள்
எனையறியாமல்
துடித்தன

இமைகளில் அழுத்தம்
இதழ்களில் எரிச்சல்
உள்ளத்தில்
இனம் புரியா வேதனை

எல்லாம் ஏன்
எங்கோ நீ
இங்கே நான்
எனினும்
எனக்கேன்
இந்த வேதனை

கைப்பேசி கதறியது
கைதவற விட்டு
பின்னர் எடுத்தேன்
அவள்தான்
காய் நறுக்கும் வேளையில்
கைதவறி
கத்தி கொண்டு
கீறி கொண்டாளாம்

அதெப்படி
அவள் வேதனை எனக்குள்
உத்தரவின்றி
உள்ளே வந்தது

ஆழ்மனதில்
அவள் நினைவு பூக்கள்
அதிகமாய்
பூப்பதாலா

எனை சுற்றி
அவள் நினைவு
சில்வண்டாய்
சுற்றுவதாலா

இருப்பதும்
நடப்பதும்
பறப்பதும்
மகிழ்வதும்
மலர்வதும்
உணர்வமென
எல்லாமாய் என்னிலவள்
இருப்பதாலா

எப்படியோ
அவள் வேதனை
அறியுமுன்னே
என்னுள்ளம்
அறிந்ததது
அவள் துடிப்பின், வேதனையின்
ஒரு பகுதி
எனில் கரையுமல்லவா…!

No comments:

Post a Comment