Monday 28 September 2015

அமரகாவியம்


















நேர் படும் பேச்சுக் கொண்டவளின்
ஒற்றைப் புன்னகை தூவலோ
ஒளிரும் விழி மலர்ச்சியோ
மெலிதான இதழ் தீற்றலோ
பேருவகை தரும் புதையலாமெனக்கு

செவியடையும்
சுற்றத்தின் கைத்தட்டல்களும்
கழுத்திலேறும் மணி மாலைகளும்
கரங்களில் வந்து சேர்ந்த மலர்ச் செண்டுகளும்
பெற்ற வேளையிலும்

அவளின் மலர்முகம் தேடியே
அலைபாயும் மனம் கொண்டிருந்தவனுக்கு
அழுந்தப் பதிந்த முத்தத்துடன்
ஆலிங்கனமும்
கிடைக்கப் பெறின்
எனதான படைப்பிலவள்
தன்னை கண்டாளென அர்த்தம்

அதனையும் கடந்து
விழி துளிர்க்க
மார்பு விம்ம
துடிக்கும் இதழ்களுடன்
தாவியெனை அணைத்தாளெனில்
அவளுணர்வுகளில் உச்சாடனம் செய்யும்
காவியம் படைத்தேனென அர்த்தம்

அப்படியோர் அமரகாவியம்
என்றேனும் படைத்து
அவளுணர்வுகளில்
கோலோச்சிக் கிடப்பேனெனும்
ஆதங்கத்துடன்
எனது பேனாவுடனான
வார்த்தையம்பெய்தும் வரியஸ்திரங்களை
படைக்கத் தொடங்கிவிட்டேன்

இலக்கடைந்து
வெற்றி கிட்ட
கவியரசனைப் பிரார்த்தித்தபடி..

No comments:

Post a Comment