Wednesday 23 September 2015

முக்காலம்


நடுநடுங்கும் நடுநிசி மயான அமைதி
நாவறண்டு நாடி சுண்டி இழுத்திட
அடுப்பறையில் உறங்கிய கருவாட்டுக் கருந்திருடனை
பேயென்று நினைத்து கிலிதொற்ற நடுங்கியதும்
உடற்குருதி உறைய இரத்தக் குழாய் சுருங்கிட
உயிர்வாயுப் பற்றாக்குறையைப்
போக்கிட அகலவாய்
வெடித்தஉதடு பனிப்புகையைக் கக்கிட
கோரைப்புல்லின் தலைக்குனிவைப் பார்த்தோரே நடுங்கினரே..!
குளிர் காலம் தொடங்கிற்றல்லோ.,
பனிக்கட்டித் தூறல்
விழுமல்லோ..!
தைமாத தரைநடுங்கிட
பனிப்பெய்ததன்றோ.?
மார்கழியோ மரம்நடுங்கிட
பனிக்கட்டி உதிருமின்றோ.!!!!

-ராம் கோவை Ram Kamal

பிரிதொரு நாளொன்றிலே
தகிக்கும் நெருப்பில் தவித்தேனும்
தூய தங்கமென தெளிவேனோ?
கருகிச் சாம்பலெனக் கரைவேனோ?
எங்கும் அழுக்காறின் புகைச் சூழ
இதயம் சருகாகி உதிர்வேனோ?
இரும்பின் திறன் கொண்டு மலர்வேனோ?
தங்கிப் போகவந்த இடங்கூட
தணலாய்ச் சுடுவது கண்டுணர்வேனோ?
எதுவும் நிலையற்றதென அறிவேனோ?

-சுமன் Suman Maha

அது ஒரு மழைக்காலம்
கருக்கொண்ட கார்முகிலின் பிரசவிப்பாய்
பூந்தூரலெனத் தொடங்கி
ஊசிச் சாரலென
ஆழப்பதிய துவங்கியது
மறுப்புக் குடையின்றி
வெளிப் புறப்பட்ட
பூந்தென்றலாய் அவளும்
வான் காதலனின் பூத் தோரணங்களோடு
அடங்கொண்ட மனம்போல்
ஆங்காரப் பேய்மழையாய் அடித்ததில் புறந்தெரிய
உட்குத்திப் போனது மின்னலொன்று ஆல்விருட்ச மொன்றினடியில்
வான் காதலனை
கொஞ்சந்தள்ளி வைத்திடயெண்ணி நின்றதில்
மரத்தடியோர களிமண் கரைசலில்
நிலைத்துப் போனதவள்
விழிமலர்கள்
கருநீராய் கரைந்தது களிமண்ணா
கன்னியிவள் மனதா
கார்வண்ணன் அறிவானோ...???

-சரவணா ஹரி

No comments:

Post a Comment