Monday, 21 September 2015

Thamizhk Kaathalan Thamizhkkaathalan


Thamizhk Kaathalan Thamizhkkaathalan

மிகச் சிறந்த தமிழ்ப்புலமை மிக்க ஒரு உயர்ந்த தரமான மனிதர். மிக உயர்ந்த சமூக சிந்தனை உள்ள அற்புதமான நண்பர். எனக்கு 2013ல் தோழி Anitha Raj மூலமாகவும் காயத்ரி வைத்தியநாதன் மூலமாகவும் அறிமுகமானார். அபோது அவர் தமிழ்க்குடில் என்னும் அமைப்பின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் சிலம்பூர் என்னும் கிராமத்தில் நூல்நிலையம் ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு தனி மனிதனால் எப்படி நூல் நிலையம் அதுவும் ஒரு கிராமத்தில் எந்த எதிர்பார்ப்புமின்றி கிராமத்து மக்களுக்கு படிக்கும் ஆர்வம் அதிகப்படவேண்டுமெனும் நல்லெண்ணத்தில் செய்ய முடிகிறது என என்னுடைய ஆவல் அதிகமானது.

சில நாட்களில் அவர் சமூகப் பணிக்காகவும் தமிழ்மேலுள்ள அதீத பற்றுதலில் தமிழ் மொழியை ஆய்வு செய்யவும் தனது பணியை விட்டு விட்டார் என அறிந்த போது இன்னமும் ஆச்சரியம் அதிகமானது.

நட்பில் இணைந்த பின்னர் அவரது பக்கங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். பிரமித்தேன். தமிழமுது அவரது பக்கங்களில் நாம் பருகக் குறையாத செல்வமாய் கடலென இருந்த்து. அவற்றில் சில இதோ

அண்டம் ஆண்டவன் பிண்டம் கேட்கிறான்
அகிலாண்ட நாயகியிடம் அடைக்கல மாகிறான்
நிலைக்குட மெடுத்த வடிவுடைத் தேவி
நிறைமதி நிறைத்த நிர்க்குண மேவி

https://www.facebook.com/photo.php?fbid=591180740933316&set=a.578830362168354.1073741825.100001241860547&type=1

எனத் தொடங்கும் இப்பாடல்தான் நான் முதன் முதலில் வாசித்த நண்பரது கவிதை. பிரமித்தேன், அர்த்தம் புரிந்துகொள்ள பலரை நாடினேன். இன்னமும் முழுமையாகப் புரியவில்லை.

எத்தனை எத்தன் எத்தனை எத்தினும்
எத்திப் பிழைத்தல் பிழை யாகாதெனின்
எத்தனை செயினும் எத்தன் வழியில்
எத்தனிக்க முயல்வர் இயலாதார்
என எத்தர்களை எவ்வளவு அழகாக சொல்கிறார்
அலைகளில் வரிகள் அலைய லையாய்
அலையெழ அலைவிழ அலை யலைந்து
அலை யவிழும் அலைகளில் அசையும்
அலையிலை விழும்துளி அசைய அசைய
அலைகளில் மிதக்க மிதக்கும் மிதப்பில்
அலையும் வரியாகும் வரியும் அலையாகும்
அலைதல் அலைய அலைதல் புரிய
அலை அலையாய் விரியும் பெருவெளி
அலையின் அசைதல் அலைதல் இசையாய்
அலைதல் இசைதல் அலை வடிவின்
அழகாய் அழகில் அலைகிறேன்.
என அலை எனுஞ்சொல் கொண்டு அழகிய கவிதை வடிக்கிறார்
சுடும் பலகாரம் சுடும் - நீ
சுடும் பலகாரம் சுடும் - நினைவுகள்
சுடும் பலகாலம் சுடும் - என் நினைவுகள்
சுடும் பல-காரம் சுடும் உனை

https://www.facebook.com/photo.php?fbid=637257946325595&set=a.578830362168354.1073741825.100001241860547&type=1

எனும் இக்கவிதையில் தீபவளி பலகாரம் கொண்டு புதுப்பாடல் புனைகிறார்

காற்று நடந்து போனத்தடம் என்னில்
கவிதையாகி கிடக்கிறது வரியாய் - அலையாய்
அலைந்த தன்தடம் அமைதியாய் ஆழப்பதிந்த
குறுமேடும் பள்ளமும் விளக்கமும் பொருளுமாய்

https://www.facebook.com/photo.php?fbid=633918309992892&set=a.578830362168354.1073741825.100001241860547&type=1

எனத் தொடங்கும் இக்கவியில் பாலையை கருவாகக் கொண்டு பல பாடம் படிப்பிக்கிறார்

முற்றத்தையா இடித்தீர் - தமிழர் எங்கள்
முகத்தை அன்றோ இடித்தீர்
பழித்தீர்த்த படலம் நடத்தினீர் - நம்
பகைவனினும் கீழாய் நடந்தீர்
புகழ்ச்சியின் போதையோ புத்தியில் - காழ்ப்
புணர்ச்சியின் வாதையோ சிந்தையில் - வாழுங்கால்
வாய்த்த வரலாற்று பொக்கிசத்தை இழந்தீர்
இகழ்ந்தீர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை - தமிழன்
தன்மானம் உடைத்தீர் - உங்கள் உள்முகம்
தரணிக்கு படைத்தீர் - எங்கள் மக்கள்
தன்னைப் புரிய தகாதன செய்தீர்
தானென்ற வீம்பில் தானேபோய் வீழ்ந்தீர்
அன்பிலிட்ட மக்களை வம்பில் இட்டீர்
ஆரத்தி ஏந்திய கைகளில் கொள்ளியை
தந்தீர் அவர்தம் கண்களில் முள்ளியை
புதைத்து முற்றத்தை இடித்து வீழ்ந்தீர்
மாண்புற்ற இனம் வாழ்ந்த மண்ணில்
வீம்புற்றார் வாழ்ந்ததில்லை உண்மை சாற்றுகிறோம்
தடமின்றி போவீர் இப்புவியில் - வாழ்ந்த
தடமின்றி போவீர் இத்தமிழில்.
என முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்த சம்பவத்தை இடித்துரைக்கிறார்

நண்பரது கவிதைகளை நீங்கள் “இதயச்சாரல்”

http://ithayasaaral.blogspot.in/2013/12/blog-post_1613.html…

என்னும் வலை பின்னலிலும் பார்க்கலாம்


தன்மானமிக்க தமிழனாக நற்சேவை புரியும் தொண்டனாக நல்லுள்ளம் கொண்ட மனிதனாக எனக்கு காணப்படும் இப்பெருமகனின் சேவைகளும் தமிழும் மேலும் மேலும் வளர்ந்து அன்னாருக்கும் இந்த தமிழுலகத்திற்கும் அவனிக்கும் நன்மைகள் பல பயக்கட்டுமென வாழ்த்துவீராக

No comments:

Post a Comment