Monday, 21 September 2015

அழகென்பது


அழகென்பது அன்பில் உறைவது
அழகென்பது ஆனந்தம் கொள்வது
அழகென்பது ஆறுதல் தருவது
அழகென்பது மகளின் பொன் மடியது

அழகென்பது தாயின் முந்தானையில் துடைப்பது
அழகென்பது தந்தையின் மார்பில் உறங்குவது
அழகென்பது வாக்குத் தவறாதது
அழகென்பது நட்பின் பெருமிதமது

அழகென்பது உண்மையின் உருவமது
அழகென்பது இதழில் மலர்ந்து இசைப்பது
அழகென்பது ஒளிரும் விழியில் தெளிவது
அழகென்பது விகசித்த நாசியில் வீசும் நறுமணது

அழகென்பது தன்னை உணர்வது
அழகென்பது கருணையின் முகமது
அழகென்பது பெண்மையின் குணமது
அழகென்பது இயற்கையின் இதமது

அழகென்பது எவ்விதமானாலும்

எனக்கு என்றுமே நீயாயிருப்பது

No comments:

Post a Comment