Wednesday 23 September 2015

Dhass Mani



அன்பு நண்பர் Dhass Mani எனக்கு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நட்பில் இருக்கிறார். அன்பாகவும் எளிமையாகவும் பழகக் கூடிய இனிய நண்பர். மென்சொல் மட்டுமே பேசத் தெரிந்தவர். தனது எழுத்துக்களிலும், நண்பர்களுடைய பதிவுகளில் பின்னூட்டம் இடுவதில் சுவை மிகுந்திருக்கும். எத்தகைய பதிவானாலும் அதை ஆழப் படித்து அறிந்து பின்னூட்டம் இடக் கூடியவர்.
தனது எழுத்துக்களாலும், நல்ல பழக்கத்தினாலும் அனைவரையும் கவர்ந்திருக்கும் அன்பு நண்பர், எல்லாத் துறைகளிலும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார். குடும்பம், சமூகம், காதல், நட்பு என பலத்தரப்பட்ட கவிதைகளை படைத்திருக்கிறார்.
"மகா கவி" பாரதிக்கு அர்ப்பணம்....
கவிஞன்
கற்பனை உலகில்
வாழ்கிறான் !! என
யார் சொன்னது ?...
https://www.facebook.com/photo.php?fbid=205672906272737&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனும் இக்கவியில் மகாகவிக்கு மிக அழகான பாராட்டுதலை மொழிகிறார். வாசிப்போரின் மனம் விம்மும்.
உனக்கான சேவைகளில்
எனக்கான தேவைகள்
தீர்ந்து விடுகிறது..!!
https://www.facebook.com/photo.php?fbid=376198132553546&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனத் தொடங்கும் இக்கவிதையில் இரு உள்ளங்களின் தவிப்புத் தெள்ளெனத் தெரிகிறது.
காணாத காலங்களில்
கவிதையாகி விடுகிறாய்..
அருகில் இருக்கையில் அதன்
அர்த்தம் உணர்த்தி விடுகிறாய்..
https://www.facebook.com/photo.php?fbid=437572259749466&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனத் தொடங்கும் கவிதையிலோ அவ்வுள்ளத்தின் உள்ளூரும் பாசப்பிணைப்பு வரிகளில் நம்மையும் உணரச் செய்கிறது
ஒட்டுப் போட்ட சேல ஒன்னு
ஒடம்போட சுத்தியிருக்க..
https://www.facebook.com/photo.php?fbid=412342855605740&set=a.108650899308272.15654.100004900868519&type=1
எனும் இக்கவிதையில் ஏழ்மையின் கொடுமை வரிக்கு வரி தோய்த்து எழுதப்பட்டிருக்கிறது. இறுதியில் நான் செத்த அழ நீயிருக்கிறாய் மகளே, நீ செத்தா அழ யாரிருக்கா என கேட்கும் வரிகளில் உள்ளம் நைந்துதான் போகின்றது.
இப்படி பலப்பல படைப்புகள் தன் எளிமையான அழகான தமிழ் கொண்டு அனைவரும் படித்து ரசிக்கும்வண்ணம் எழுதி பதிவிட்டு வருகிறார்.

இந்த அழகிய நண்பரின் தமிழார்வம் மென்மேலும் வளர்ந்து இன்னும் பலப்பல படைப்புகள் படைத்து நமக்கு வழங்கட்டுமென நானும் வாழ்த்துகிறேன். நீங்களும் வாழ்த்துங்களேன்.

No comments:

Post a Comment