Monday 21 September 2015

கால நீட்சி Time dilation


கால நீட்சி Time dilation

ஐன்ஸ்ட்டீனின் கோட்பாடுகளில் ஒன்றான கால நீட்சி குறித்து நான் படித்த சில விஷயங்களை பகிரவே இந்தப் பதிவு

நேரம் என்பது உலகத்தை பொருத்த ஒரு அளவீடு. பூமியின் சூரியனை சுற்றி வரும் கால அளவையும் தன்னையே சுற்றி வரும் கால அளவையும் கொண்டு இந்த நேர அளவீடு கணக்கிடப் படுகின்றது. ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின்படி நேரம் புவியீர்ப்பு விசையை கடந்தால் மாறுபடும்.

வானில் உபகலங்களில் பயணம் செய்பவர்களின் நேரக் கணக்கீடோடு ஒப்பிடும்போது நமது 81 நாட்கள் அவர்களுக்கு 80 நாட்களென அறியப்பட்டது. அதாவது பூமியை விட்டு விலக விலக நேரத்தின் அளவு மாறுபடுகின்றது.

பிரபஞ்சத்தின் எல்லையற்ற விரிந்த பகுதியில் நாம் செல்லும்போது நிச்சயம் நமக்கு நேரத்தின் கணக்கில் பெருத்த மாறுபாடு நிகழ வாய்ப்புண்டு. ஆனால் இதைக் குறித்து இவ்வளவு ஆராய்ச்சிகள் நாம் மேற்கொண்டிருக்கும் இந்நிலையில் நமது புராணங்களிலும் வேதங்களிலும் இந்த நேர நீட்சிகான குறியீடுகள் காணப்படுவது ஆச்சரியப்படுத்துகின்றன

பாகவத புராணத்தில் சொல்லப்படுகின்ற ரேவதி கதையில் ரேவதிக்கு மணவாளனை தேடி விண்ணுலகம் சென்ற ரேவதியின் தந்தையை பார்த்து ப்ரம்மன் நகைத்து உலகின் நேரக்கணக்குக்கு இங்கு உள்ள நேர கணக்கின் வித்தியாசப்படி நீ ஏற்கனவே 1000 ஆண்டுக இழந்துவிட்டாய் என்று சொல்வதாக குறிப்பு இருக்கிறதாம்.

நாரதர் மூவுலக சஞ்சாரி என அழைக்கப்படுபவர். ஒளிவேகத்தையும் தாண்டிய மனோவேகத்தில் செல்லக் கூடியவர். இந்திரன் முதலான தேவர்களின் வயது பூமியில் உள்ளவர்களை விட அதிகம். பிரம்மனின் ஆயுள் 311.04 ட்ரில்லியன் ஆண்டுகள் என்பது போன்ற குறிப்புகள் நம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குகின்றன

புராண வேத இதிகாசங்களில் குதிப்பிடப்பட்டவை உண்மையா பொய்யா என்பதைவிட நமது முன்னோர்கள் சிந்தனையில் இந்த நேர நீட்சி என்னும் கருத்து எப்படி தோன்றியது என்பதே எனக்கு வியப்பாக இருக்கின்றது

மேலும் விவரங்களுக்கு இந்த வலைப்பூவை பாருங்கள்.

ஆங்கிலப் படமான Interstellar ம் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.


பி.கு இங்கு கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றியோ, மத நம்பிக்கைகளை ஆதரித்தோ தாக்கியோ பின்னூட்டங்கள் வேண்டாம்

No comments:

Post a Comment