Thursday 10 September 2015

சிறகில்லா பறவை

























சிறகில்லா அப்பறவையின் மேல்
சித்திரங்களாய் சில சிறகுகள்
வரையப்பட்டிருக்க
வானுயரப் பறக்கும் ஆவலுடன்
இயல்பில்லா சிறகுகள் கொண்டு
எட்டாத வானத்தை
தொட்டுப் பார்க்க ஆசைபட்டது

அப்பழுக்கற்ற வெண்ணிற வானமோ
தனதிருப்பிடம் சேர
வரைபடங்கள் போறா
பெருமழை பொழிகையில் கரையும் சித்திரச் சிறகுகளை
களைவாயானால்
தன்னைத் தொட முடியலாமென

ஒவ்வொன்றாய் பிய்த்துப் போட்டு
தன்னை நிர்வாணமாக்கிக்கொண்டதை கண்டு
பிற பறவைகள் எள்ளி நகையாடுமானாலும்
தனக்குப் பிடித்த வானத்தை தாவிப் பிடித்தே தீரவேண்டுமென
வண்ணச் சிறகுகளை களையத் தொடங்கியது

தனக்கு உயிரில்லையென உணராத

அப்பறவை…..

No comments:

Post a Comment