Friday 4 September 2015

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


ஆசிரிய பெருந்தகைகளுக்கு சமர்ப்பணம்

அந்த பள்ளியின் ஆண்டு நிறைவு விழாவில் பள்ளி முதல்வர் பேசும் பொழுது,

ஒரு மருத்துவருக்கு அவர் குழந்தையை மருத்துவராக்கவே பிடிக்கும். ஒரு பொறியாளருக்கு அவர் குழந்தையை பொறியாளராக்கவே பிடிக்கும். பெரும் வியாபாரிக்கு அவர் மகனை ஒரு நிறுவனத்தின் முதன்மை நிறுவனராக்குவதிலேயோதான் விருப்பம். ஆனால், ஒரு ஆசிரியருக்கோ அவர் குழந்தையை மருத்துவராகவோ, பொறியாளராகவோ, முதன்மை நிறுவனராகவோ ஆக்குவதிலேதான் விருப்பம் இருக்கிறது.”

அப்போது அங்கு குழுமியிருந்த கனவான்களில் ஒரு உயர்ந்த நிறுவனத்தின் நிறுவனத் தலைவர், கல்வியில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்ட விரும்பி சொன்னார், “ஆசிரியர் ஆவதுதான் என் குறிக்கோள் எனும் சாதரண சிந்தனை உள்ள குழந்தை வளர்ந்து ஆசிரியராகும்போது, அவரிடம் குழந்தைகள் என்ன பெரிதாய் கற்றுவிடப் போகிறார்கள்?” என்று.

மேலும் அவர் கருத்தின் முக்கியத்துவத்தை குறிக்க வேண்டி, “மேடம் விஜயலஷ்மி, நீங்கள் ஆசிரியை தானே, உண்மையை கூறுங்கள், நீங்கள் என்ன சாதித்தீர்கள்?” என்று கேட்டார்.

ஆசிரியை விஜயலஷ்மி, நேர்மைக்கும், துணிவிற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். “என்னையா கேட்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டு ஒரு நிமிடம் அனைவரையும் ஆழ்ந்த பார்வை பார்த்து பின்னர் தொடங்கினார்.

நான் குழந்தைகளை அவர்களுக்கு எல்லையென எதை தீர்மானிக்கிறார்களோ, அந்த எல்லையை விரிவு படுத்திக் கொடுக்கிறேன்.

தாழ் நிலை உணர்வுள்ள குழந்தைகளுக்கு உயரிய சாதனையை செய்யும் எண்ணத்தினை வளர்த்துக் கொடுக்கிறேன்.

ஐந்தாவது நிலையை எட்டிய குழந்தையை அரிய படிப்புக்களை படிக்க தன்னால் முடியுமென நம்பிக்கை கொள்ள வைக்கிறேன்.

பெற்றோரால் 5 நிமிடத்திற்குமேல் ஒரு இடத்தில் உட்கார வைக்க முடியாத குழந்தையை 40 நிமிடங்கள் ஒரு அறையில் என் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன்.

இன்னும் நான் என்ன செய்கிறேன் எனத் தெரிய வேண்டுமா?” என சிறிது நிறுத்தி அனைவரையும் மீண்டும் ஒரு முறை நோக்கிவிட்டு தொடர்ந்தார்.

நான் குழந்தைகளுக்கு எதையும் பார்த்து வியப்பதற்கு சொல்லித் தருகிறேன்.
நான் அவர்களை கேள்விகள் கேட்க கற்றுத் தருகிறேன்.

அவர்களுக்கு மன்னிப்பின் தன்மையை புரிய வைத்து மன்னிக்க கற்றுத் தருகிறேன்.
நான் அவர்களுக்கு மதிப்பளிக்கவும், பொறுப்புகளை ஏற்றெடுக்கவும் பயிற்றுவிக்கிறேன்.
அவர்களுக்கு எழுதுவதை சொல்லிக்கொடுத்து எழுதவும் வைக்கிறேன். கணிணியின் தட்டச்சு மட்டுமே போதாதல்லவா?

அவர்களை படிக்க, படிக்க, மேலும் மேலும் படிக்க சொல்லித் தருகிறேன்.
கணிதத்தின் சிறப்புகளை உணர வைக்கிறேன்.

அவர்கள், இறைவன் கொடுத்த மூளையை உபயோகிக்க கற்றுத்தருகிறேன். கணக்கிடும் இயந்திரங்கள் உங்கள் தொழிற்கூடங்களுக்கே இருக்கட்டும் என அவர்களுக்கு புரிய வைக்கிறேன்.

எந்த மாநிலத்து, மொழியினத்தவராயினும் அவர்களுக்கு ஒற்றுமையின் பலத்தை சொல்லிக் கொடுக்கிறேன்.

எனது வகுப்பறை மாணவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற உணர்வை கொடுக்கிறேன்.

இறுதியாக, அவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்ட இந்த வாழ்க்கையை கடினமாக உழைத்து, அவர்களின் இதயத்தின் சொல்படி கேட்டு நடக்கும்போது வாழ்வின் அனைத்து வெற்றிகளும் அவர்கள் அடைவார்கள் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.”

இறுதியாக நிறுத்தி அனைவரையும் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.

என்னிடம் என்ன சாதிக்கிறாய் என யாரேனும் கேட்கும்போது, பணம் உண்டாக்குவது ஒன்று மட்டுமே வாழ்வின் வெற்றியல்ல எனும் திண்மமான எண்ணம் கொண்ட நான், நெஞ்சு நிமிர்த்தி, தலை தூக்கி, அவர்களை துச்சமென மதித்து, அறியாமையில் உழல்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்து விட்டு நகர்கிறேன்.

இனியும் உங்களுக்கு நான் என்ன செய்கிறேன் எனத் தெரிய வேண்டுமா?
உங்கள் அனைவரது வாழ்விலும் ஒரு மாற்றத்தை உண்டாக்கி கொண்டு இருக்கிறேன்.
உங்கள் குழந்தைகளை மருத்துவராகவும், பொறியாளராகவும், நிறுவனத் தலைவர்களாகவும் ஆவதற்கு அவர்களை தயார் செய்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் நிறுவனத் தலைவரே, நீங்கள் என்ன சாதிக்கிறீர்கள்?
நிறுவனத் தலைவர் தலை தாழ்ந்தது.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment