Saturday 12 September 2015

பழந்தமிழ் பாட்டு

முக்காலை கைபிடித்து மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலைநாகம் அழுந்த கடித்தால்
பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துரு
பத்தினியின் கால்வங்கி தேய்

Manoharan Ganapathy கைத்தடி ஊன்றி போகும் வழியில் நெருஞ்சிமுள் காலில் குத்தினால், தரையில் தேய் என்பதை இவ்வளவு அழகான, செய்யுளால். கூறிய தமிழர்கள் பெருமைக்குறியவர்களே.
Unlike · Reply · 1 · 20 mins

Manoharan Ganapathy நெய்தலில் , பாடல் நெய்யும் கவி இனைந்து காணப்படுவது மகிழ்ச்சி.
Unlike · Reply · 1 · 17 mins

Devadassou Rajabather பத்துரதன்= தசரதன் , தசரதன் புத்திரன் = இராமன் , இராமனின் மித்திரன் = சுக்கிரீவன் , சுக்கிரீவனின் சத்துரு = வாலி , வாலியின் பத்தினி =தாரை, தாரையில் கால் வாங்கினால் தரை. காலை தரையில் தேய் ஏன் ? வெளியில் போகையில் நெருஞ்சி முள் காலில் தைத்தது என்பதை முதலிரு வரியில் கூறிய புலவர் காலை தரையில் தேய் சரி.யாகிவிடும் என்கிறார்
Unlike · Reply · 1 · 15 mins

Manoharan Ganapathy முக்காலை - கைத்தடி பிடித்து வயதான காலத்தில், எனவே முக்கால்.
மூவிரண்டு போகையிலே-
மூவிரண்டு ஆறு. அல்லது வழி.

No comments:

Post a Comment