இது கேரளாவில் பிரபல்யமான கதை, படித்து மகிழுங்கள்
ஒரு அப்பா, அம்மா அவர்களது மகளை கல்யாணம் செய்து கொடுத்து விட்டனர். அந்த அப்பா, மகளை பார்த்து வருகிறேனென சொல்லி போகிறார். பெண் வீட்டில் சென்று தங்கி இருக்கும் போது பெண் அப்பாவுக்கு கொழுக்கட்டை பலகாரம் செய்து கொடுக்கிறாள். அதை மிகவும் ருசித்து தின்ற அப்பா மகளிடம், “இதன் பேர் என்ன மகளே, நான் போய் அம்மாவிடம் சொல்லி செய்ய சொல்கிறேன்” என்று கேட்க மகளும் அப்பாவிடம், “இதன் பெயர் கொழுக்கட்டை” என சொல்லி அனுப்புகிறாள்.
வரும் வழியெல்லாம் பெயர் மறக்காமல் இருக்க, கொழுக்கட்டை, கொழுக்கட்டை என மனனம் செய்து கொண்டே வரும் அந்த முதியவர், ஒரு ஓடையை தாண்டி குதித்து கடக்க நேரிடும் போது, தவறி விழுந்து விட, “தித்தை” என சொல்லிக் கொண்டு விழுகிறார்.
மீண்டு எழுந்தவர் மனதில் கொழுக்கட்டை பெயர் மறந்து போய் தித்தை மட்டுமே உள்ளது. தித்தை தித்தை என சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தவரிடம், அவரின் மனைவி, “என்ன, இப்படி நனைந்து போய் வந்திருக்கிங்க?” எனக் கேட்க, அவரோ, “அதெல்லாம் விடு, எனக்கு தித்தை பலகாரம் செய்து தா” எனக் கூறுகிறார்.
மனைவியோ, “ தித்தையா? அப்படி எதுவும் பலகாரம் இல்லை” எனக் கூற, கோபம் கொண்ட முதியவர், மனைவி முதுகில் நன்றாக அடித்து விட, முதுகு கொழுக்கட்டை போல வீங்க, மனைவி, “பாவி மனுஷா, என்ன அடிச்சு என் முதுகுல கொழுக்கட்டை போல வீங்க வச்சுட்டியே” எனக் கூறி அழ, அந்த பெரியவர், “ அய்யோடி, அந்த பலகாரம் பெயர் கொழுக்கட்டை டி” எங்க் கூறி சமாதானம் செய்து பின்னர் செய்து கொடுக்க சாப்பிட்டாராம்.
(இதுக்கெல்லாம் சிரிக்க மாட்டேன்னு சொல்றவங்க நிறைய கொழுக்கட்டை சாப்பிட்டு வயிறு வலிக்க கடவது”)
No comments:
Post a Comment