Thursday, 10 September 2015

பித்தானேன் நான்




கலைந்த கற்றை முடி காற்றிலாடி
நுதல் பரவி விழி மறைக்க
கார்மேகம் ஊடுருவி கருவிழிகள் கதை சொல்ல
ஜ்வலிக்கும் முத்தை சூடிய நாசி
துடிப்புடன் என்னை பாரென்று கூவ
சற்றே பிளந்த கோவைப் பழத்தினுள்
பலனூறு முத்து பளபளக்க
அத்தானென்றாள்

ஆசையில் பித்தானேன் நான்...

No comments:

Post a Comment