Friday, 25 September 2015

கவிதை களஞ்சியம்


மஹா சுமன்
Yesterday at 10:01am ·
அன்புத் தோழமைகளே இப்புகைப்படத்திற்கு தோன்றும் உங்கள் எண்ணங்களையும் இங்கு தூவலாமே
தூரத்து மலைமுகட்டில்
நின் நினைவுகளைச் சுமந்து
பொழியும் மழையில்
மனம் ஒட்டிக்கொள்ள
இடைப்பட்ட தூரம் கடப்பதற்கு
எளிதாயிருந்தது....

Rishaban Srinivasan
மனம் கடக்க
மார்க்கம் கண்ட
கவிதை இனம்..
Unlike · Reply · 11 · Yesterday at 10:05am

மஹா சுமன் ஆஹா மனமகிழச் செய்யும் விதம் உங்கள் வசம்
Like · Reply · 5 · Yesterday at 10:07am · Edited

Vijaya Kumar Sumathi
மெளனம் தடதடக்கும்
உன்னைப்போலவே
மலைமுகடும் காடுமதிர
அமைதி தவழாத சாலை
Like · Reply · 9 · Yesterday at 10:08am

Thamizh Thendral
இதயத்துடிப்பாய்
நீயிருக்க
இமயமும் என் இமைகளுக்குள் அடங்கியதுபோல
எட்டாத்தூரங்களும் இலக்கடையமுடியா தொலைவுகளும் நின் நினைவுக்கோதலினால் நிமிட நேரத்திற்குள் நம்மயமானதென்ன நங்கையே..
நல.லாள் உந்தன் நன்னினைவில் நானிலமும் சுருக்குப்பையிலிட்ட வெற்றிலையாய் சுருங்கியதென்ன சுந்தரியே...
Unlike · Reply · 17 · Yesterday at 10:08am

Asokan Uru
சில்லென்ற காற்று
Unlike · Reply · 3 · Yesterday at 10:09am

Udhaya Lakshmi
அத்தனை தூரத்தில்
இருந்தாலும்,
ஆளரவமில்லாத,
அந்தகார மலைமுகட்டில்,
அந்திப்பொழுது போல
முந்திவந்துவிட்ட-என்
முதுமை காலத்திலாவது,
முழுமன அமைதியுடன்,
வாழ்ந்து விட வேண்டுமென்ற,
ஆசை மூட்டைகளுடன்,
பயணம்
தொடங்கிவிட்டேன்.
Unlike · Reply · 13 · Yesterday at 10:13am

அருள் குமரன்
இலக்கு
தெளிவாய்த்தெரிபவனுக்கு
அடையும்
தூரம்தெரிவதில்லை...
Unlike · Reply · 12 · Yesterday at 10:15am

சுபி பிரேம்
நெடுந்தூரப் பயணம்
நெடுஞ்சாலை ஓரம்
ஏற்ற இறக்கங்களுக்கு
இடைய
வண்டியின் பாரத்தை விட
என் நெஞ்சில் பாரம் அதிகம்
நேசமானவனே பாசத்தோடு
பத்திரமாக பயணம் முடித்து
வீடு வா
Unlike · Reply · 11 · Yesterday at 10:17am\

Ramani Murugesh
நீள் சாலைகளும்
மலை முகடுகளும் தாண்டி..
காத்திருக்குமென்
மனையாளும் மக்களுமே
என் கண்களில்..
தூரே இருந்து
ரசிப்பதிருக்கட்டும்..
ஒரு முறை
ஓட்டித்தான் பாருங்களேன்
இந்த கனரகத்தை..
வாகனம் மட்டுமல்ல
என் போல்
மனசும் கனமாகிவிடும்
கொடுமை நிகழலாம்!!
Unlike · Reply · 15 · Yesterday at 10:20am · Edited

Dhass Mani
உன் நினைவுகளின்
சுமையோடு நகர்ந்திடும்
எந்தன் நெடுந்தூரப்
பயணம்.. என்றும்
இனிமையோடு இதமாகிறது smile emoticon
Unlike · Reply · 11 · Yesterday at 10:26am · Edited

Vijay Kumar Viji
தூரத்து பச்சை. ...பசுமையாய் மனதினில்.....தளிர் நடை போட ஆசை
Unlike · Reply · 8 · Yesterday at 10:23am

Badulla Arul
உன் நினைவை
சுமந்து வருவதால்
என் யாத்திரைகள்
சுகப்படுகிறது..
Unlike · Reply · 10 · Yesterday at 10:56am

Rajan Raj
அருமையான புகைப்படம் சகோ

நிலத்தை கூறுபோட்ட
மனிதன்
அதை வேவுபார்க்கும்
நீலம்
மரத்தோடு மல்லுக்கட்டும்
மேகம்
தத்துவம் சொல்லும்
வீதி
இயற்கை சீரழிக்கும்
வாகனம்
துரிகையை துடிக்கச்
செய்த கமரா
வரைந்த ஓவியம்
பல ஹைக்கூ சுமக்கும்
கர்ப்பிணி
Unlike · Reply · 13 · Yesterday at 11:05am · Edited

.
இராஜசேகரன் எஸ்.வி.
உன் இனிய நினைவுகள் மட்டும்
என்னோடு இருந்தாலே போதும்
ஒராயிரம் மைல்களையும்கூட
ஒரு நொடியில் கடப்பேன்.
Unlike · Reply · 7 · Yesterday at 11:02am

Vinoth Pradeesh
மனம் கடந்து செல்ல மறுக்கிறது இந்த மலைமுகடுகளை..!
Unlike · Reply · 4 · Yesterday at 11:13am

வெண்ணிலா நிலா
இயற்கையும்,இறைமையும் ஒன்று தான்..ஆம்,இறைமையை இழந்த போது மனிதம் இல்லை,இயற்கையை இழந்த போது உலகமே இல்லை...
Unlike · Reply · 8 · Yesterday at 11:21am

Ananth Kesav
பச்சைப் பனிப் புல்லும்.. வெண்பஞ்சு மேகம் தாலாட்டும் மலைமுகடும் என் இச்சை தனை தூண்டுதடி.. என் கொச்சையான கவிதை மூலம்..
Unlike · Reply · 6 · Yesterday at 11:21am


Sri Devi kaatchigalil manam karainthu vera ethum thonavillaiye
Unlike · Reply · 2 · Yesterday at 11:35am

Saya Sundaram
எப்போதும் இப்படித்தான்
இருக்கிறாய் நீ
எத்தனை தொலைவில் இருந்தாலும்
எப்போதும் குளிர்மை கொடுக்கும்
மலையோர சாலைப் பயணம் போல.
Unlike · Reply · 7 · Yesterday at 11:58am · Edited

Logini Sun
உன் சுகமான நினைவுகளால்
சுமை கூட பஞ்சாகும்..!
செல்லும் பாதை
நெடுந்தூரப் பயணமானாலும்
தூரம் கூட கடுகதியாய் விரையும்..!
கரடுமுரடான
கட்டாந்தரை பயணம் என்றாலும்
உன் நேசம் நினைகையில்
அசதியெல்லாம்
அனாயாசமாய்
பறந்துவிடும் ...!
ஆடியசைந்து பாதையினில்
பயணிக்கையில்
நீ எனை தாலாட்டிய நேரம்
நினைவினிலாடும்..!
மீண்டும் உனை சேர்ந்திருக்கும்
அங்கலாய்ப்புடனே
விரைந்திடும்
என் பயணம் !
Unlike · Reply · 16 · Yesterday at 11:57am

Jesutha Jo
முகில்கள் தொடும்
தூரத்தில்
மலையின் முகடு
பசுமை நிறை காட்சி
மனதிற்கு இனிமை
இளமையின் துடிப்போடு
இடைப்பட்ட தூரம்
வேகமாய் கடந்து போனதே,.
Unlike · Reply · 9 · Yesterday at 12:09pm

ஷாமளா கிருஷ்ணன்
தனியே ஒரு ஏகாந்தப்
பயணம்
இந்த குளிர் மலையில்
எங்கோ தவறு..
வழி மறந்தது..
திக்குத் தெரியாத காட்டில்
இப்போது நான்!
Unlike · Reply · 5 · Yesterday at 1:43pm

வானவில்லின் வசந்தம்
எட்டிவிடும் தூரத்தில்
மலையிருந்தும்
என் பயணம் மட்டும் நீள்கிறது உன் நினைவுகளாய்
Unlike · Reply · 9 · Yesterday at 1:47pm

Mathy Nilavu
மலை முகட்டில் பெய்யும் மழைச்சாரலாய் உன் நினைவுகள்....முடிந்து விட வேண்டாம் இந்தப் பயணம் உன் குளிர் நினைவைப்போலவே.....
Unlike · Reply · 7 · Yesterday at 1:50pm

வானவில்லின் வசந்தம்
பாரம் தாங்கிய வாகனத்தில்
மனபாரம் தாங்கிய
மனதோடு
தூரம் கடக்க முயல்கிறேன்
விவகாரமான விதன்டாவாத எண்ண அலைகளோடு
Unlike · Reply · 10 · Yesterday at 1:51pm

வானவில்லின் வசந்தம்
மழைச்சாரலால் மலை குளிர
மனச்சாரலால் என் மனம் குளிர
சில்லென்ற உன் நினைவுகள்
Unlike · Reply · 11 · Yesterday at 1:53pm

வானவில்லின் வசந்தம்
சோத்துப்பண்டம் சுமந்த வண்டி
இப்ப மருந்து, மாத்திரை
சுமந்திருக்கே
விவசாய நிலத்த வித்துப்போட்டு
வெசத்தத்திங்கும் மானிடரே
Unlike · Reply · 7 · Yesterday at 1:56pm

Nandhu Kumar
மலைமகளே !!
நீ கேளாமல் வகிடெடுத்தோம் உனக்கு..
ஈறும், பேனுமாய் வாகனத்தை ஓட விட்டோம் உன்னில்..
பிடிக்காதுதான் உனக்கு
வேறு வழியில்லை எமக்கு.
உன் பொறுமைக்கு எல்லை இல்லை
எம் தொல்லைக்கும்
இல்லை எல்லை.
Unlike · Reply · 8 · Yesterday at 2:01pm

Ratnavel Yogendra
செப்பனிட்ட பாதை வழி போகுது வாழ்வு பாதையை செப்பனிடும் கனவோடு .!
Unlike · Reply · 8 · Yesterday at 2:11pm

அறிவுச்சுடர்
முந்தி செல்ல முடியவில்லை
சுமை அதிகமானதால்
மெல்ல நகர்ந்து செல்கிறேன்
இரு முறை பயணதிற்கான எரிபொருளையே
எடுத்துக்கொண்டது...
இரு தவனையாகவே சென்றிருக்கலாம்
உல்லாசமாக பறந்திருப்பேன் ...
முன்னேறி சென்றிருப்பேன்...

(கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமே)
Unlike · Reply · 8 · Yesterday at 2:24pm

Kala Puvan
இயற்கை வனப்பை ரசித்த படி மிக குறைந்த வேகத்தில் காற்றை உள்வாங்கி மிக லவகமாக பிரயாணம் தொடர்கின்றது.
Unlike · Reply · 6 · Yesterday at 2:39pm

சரவணா ஹரி
நெருங்கித் தெரியும்
நினைவுப் பசைகளாலேயே
நீண்டு இருக்கிறது
நெடுந்தூரப் பயணம்..
இடைப்பட்ட
கன பெருவெளியை
அடைப்புக் குறியீட்டில்
ஒடுங்கச் செய்திருக்கும்
மனதோர சலனம்...
Unlike · Reply · 14 · Yesterday at 3:31pm


Vasan Muthugani
ஒருவர் ஆட்சி முடிவுரையில்
கூ(ட்)டியவரை சேர்த்த சொத்துக்களை பிறர் கண் காணா இடதிற்கு மாற்றும் ரதம்
Unlike · Reply · 6 · Yesterday at 4:10pm

சரவணா ஹரி
கருநாகம் ஊர்ந்து நெளியும் நெடுங்கோடணைய
பச்சைப் பட்டை
ஓரம் நெய்து
கருமலைக்
குடைகள் செய்து
வெண்பஞ்சில் தோய்த்தெடுத்த
வெளிர் மழைத்
தூறல் பன்னீராய்
மஞ்சுப் புகைச் சாமரசம் வீச
இளந்தென்றல் ஏகாந்தமாய் அசைந்தாடுகிறாள்..
Unlike · Reply · 10 · Yesterday at 4:13pm

Ram Kamal
நெடுஞ்சாலை விளக்காய் உன் நினைவுகள் அவ்வப்போது மீட்டிக் கொண்டே இருக்கிறது என்னை., உனக்கான காதல் எனக்குள் நீண்டு கொண்டே போகிறது தொடுவானாய், மலைமுகடின் மோதலில் பட்டுத் தெறித்திடும் பனித் துளியில் கரைகிறது என் தேடலும்.
Unlike · Reply · 7 · Yesterday at 4:55pm

மஹா சுமன்
நன்றி நட்பே Vijaya Kumar Sumathi அமைதியை தொலைத்தது நாம்தானே
Like · Reply · 1 · Yesterday at 6:01pm

Sri Ramya
குளிருக்கு இதமாக உன் விரல் கோர்த்து...
மலைமேல் கொஞ்சி விளையாடும் அந்த வெள்ளை மேகம் கையில் பிடிக்க ஆசை.....
Unlike · Reply · 5 · Yesterday at 6:02pm

மஹா சுமன்
ஆஹா நண்பரே Thamizh Thendral என்ன ஒரு உதாரணம். உந்தன் நன்னினைவில் நானிலமும் சுருக்குப் பையிலிட்ட வெற்றிலையாய் சுருங்கியதென்ன// அழகோ அழகு
Like · Reply · 4 · Yesterday at 6:03pm

மஹா சுமன் தழுவியதோ கவிஞரே Asokan Uru நன்றி smile emoticon
Like · Reply · 1 · Yesterday at 6:03pm

மஹா சுமன்
சகோ Udhaya Lakshmi அந்திம காலத்துக்கான பயணத்தில் மூட்டைகளை சேர்த்தெடுப்பதை விட சந்தோஷ தருணங்களை சேர்த்தெடுக்கவேண்டுமே. அழகாக சொன்னிங்க. முதியோர்களுக்கான முத்தான வரிகளை. நன்றி
Like · Reply · 4 · Yesterday at 6:05pm

மஹா சுமன்
ஆம் நண்பரே அருள் குமரன். இலக்கை நிர்ணயித்துவிட்டால் பின்னர் தொல்லையே இல்லை. நன்றி smile emoticon
Like · Reply · 4 · Yesterday at 6:05pm

மஹா சுமன்
அருமை சகோ சுபி பிரேம். நெஞ்சில் பாரத்தை சுமந்து வரும்வழியில் விழிகள் பூத்திருந்தாயோ. அழகு smile emoticon
Like · Reply · 2 · Yesterday at 6:06pm

மஹா சுமன்
ஆமாம் ஜி Ramani Murugesh ஒவ்வொரு நாளும் ஓட்டுநரின் வாழ்வில் எண்ணற்ற கண்டங்கள். அத்தனையும் கடந்து வீடடைவது அங்கு இருப்பவர்களின் ஆசியில்தான். நன்று சொன்னீர்கள். நன்றி smile emoticon
Like · Reply · 3 · Yesterday at 6:08pm

மஹா சுமன்
இதயமெங்கும் நினைவுப் பொதி சுமந்து எத்திக்கும் எனதென்று நகர்ந்து போகும் மழை மேகமாய் இனிய பயணமோ! நன்றி சகோ Dhass Mani smile emoticon
Like · Reply · 5 · Yesterday at 6:09pm · Edited

மஹா சுமன்
தளிர் நடை போட்டு தவழ்ந்து வாங்க நண்பரே நன்றி Vijay Kumar Viji smile emoticon
Like · Reply · 1 · Yesterday at 6:10pm

மஹா சுமன்
நினைவுச் சுமைகள் துணையிருப்பதாலோ சகோ Badulla Arul அருமை. நன்றி smile emoticon
Like · Reply · 2 · Yesterday at 6:10pm

மஹா சுமன்
ஓவியரல்லவா, கவிதையிலும் கற்பனையிலும் கலந்து சிலிர்க்க வைக்கும் சகோதரனல்லவா, அழகும் தெளிவுமான வார்த்தைகள். அழகு சகோ Rajan Raj smile emoticon
Like · Reply · 3 · Yesterday at 6:12pm

மஹா சுமன் நினைவுகள் சுமந்த அனுமனோ நண்பரே
இராஜசேகரன் எஸ்.வி. எந்த தூரத்தையும் எளிதில் கடப்பேனென்கிறீரே. வாழ்த்துக்களும் நன்றியும் smile emoticon
Like · Reply · 2 · Yesterday at 6:13pm

மஹா சுமன்
இருப்பிடமாய் கொண்டு இன்பக் காற்றை சுவாசிக்கத் துடிக்கின்றதோ. நன்றி நண்பரே Vinoth Pradeesh
Like · Reply · 2 · Yesterday at 6:13pm

மஹா சுமன்
ஆம் நட்பே வெண்ணிலா நிலா இயற்கை இல்லையேல் உலகமே இல்லை. உலகமே இயற்கை. நாமும் அதில் ஒரு பாகம்
Like · Reply · 2 · Yesterday at 6:14pm

மஹா சுமன்
கவிதை கொச்சையானாலும் இதய இச்சையில் பிறந்ததினால் மேகத் தாலாட்டின் மெல்லிசையில் மகிழ்விக்கின்றது ஜி. நன்றி Ananth Kesav
Like · Reply · 3 · Yesterday at 6:15pm

மஹா சுமன்
கண்களை மூடி ரசித்து தன்னிலை மறந்தீரோ. நன்றி நட்பே Sri Devi
Like · Reply · 1 · Yesterday at 6:16pm

மஹா சுமன்
இதயத்தில் குளிர்ச்சியை உண்டுசெய்யும் அன்பனின் தொலைவு அகத்திற்குத் தெரிவதில்லையே மா. நன்றி Saya Sundaram
Like · Reply · 2 · Yesterday at 6:16pm

மஹா சுமன்
பயணத்தின் களைப்பை போக்கிட பக்குவமான வழி சொன்னீரே. உள்ளத்தில் உள்ளவரை உள்ளிருத்தி நினைத்திருக்க சாலையின் கடினமும் சடுதியில் மறையுமென்றே. அழகு நட்பே Logini Sun நன்றி smile emoticon
Like · Reply · 4 · Yesterday at 6:18pm

மஹா சுமன்
தூரத்தை கடக்க இளமை துடிப்பை மீட்டெடுக்க இனிய காட்சி உதவியானதோ. சுகம் நட்பே Jesutha Jo
Like · Reply · 1 · Yesterday at 6:19pm

மஹா சுமன்
ஏகாந்தப்பயணத்தில் எவ்வாறு மறந்தாலும் உள்ளத்திருப்பவனை நினைத்தால் ஒளி தெரியும். வெளிவருவதற்கு வழியும் புரியும். நன்றி நட்பே ஷாமளா கிருஷ்ணன்
Like · Reply · 2 · Yesterday at 6:20pm

மஹா சுமன்
நினைவுகளாய் நீளும் பயணத்தில் எட்டிய மலையில் எல்லயில்லா மகிழ்ச்சி காணுமோ. நன்றி சகோ வானவில்லின் வசந்தம்
Like · Reply · 2 · Yesterday at 6:21pm

மஹா சுமன்
குளிர் நினைவும் குதூகலமாய் குழந்தையின் கைகளில் மலர்ந்த மலராய்.. அழகு நட்பே Mathy Nilavu
Like · Reply · 3 · Yesterday at 7:35pm · Edited

மஹா சுமன்
தூரத்தை கடக்க எளிய வழி விவகாரமான வுதண்டாவாத எண்ணங்களை தொலைப்பதே. நன்றி சகோ வானவில்லின் வசந்தம்
Like · Reply · 2 · Yesterday at 6:22pm

மஹா சுமன்
எங்கும் குளிர்ச்சி பெருக்கெடுத்ததோ. மகிழ்ச்சி சகோ வானவில்லின் வசந்தம்
Like · Reply · 2 · Yesterday at 6:23pm

மஹா சுமன்
உண்மை சகோ. விவசாயத்தை கொன்று விஷத்தை தின்கிறோம். வாழ்வியல் வரிகள். நன்றி சகோ வானவில்லின் வசந்தம்
Like · Reply · 3 · Yesterday at 6:23pm

மஹா சுமன்
இயற்கையை கொன்று எம்பசி தீர்க்க எண்ணற்ற ஈறுகளை உன்னில் விட்டு உருக்குலைக்கிறோம் உன்னை. ஆஹா அருமையான சிந்தனை. நன்றி நண்பரே Nandhu Kumar
Like · Reply · 5 · Yesterday at 6:24pm

மஹா சுமன்
தனது பாதையை செப்பனிட செப்பனிட்ட பாதையில் பயணம் இலகுவானதே. ஆனால் முன்னின்று வழி நடத்த புதியபாதையல்லவா வேண்டும். நன்றி நண்பரே Ratnavel Yogendra
Like · Reply · 5 · Yesterday at 6:26pm

மஹா சுமன்
பயணத்தை இலகுவாக்க எரிபொருள் சேகரிக்க சுமையை குறைக்கத்தான் வேண்டும் சகோ அறிவுச்சுடர். வாழ்க்கை பயணத்திற்கும் அதுபோலே
Like · Reply · 4 · Yesterday at 6:26pm

மஹா சுமன்
காற்றை உள்வாங்கி உல்லாசப் பயணம் போகுங்கால் ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கற்பனை பூக்கும். நன்றி நட்பே Kala Puvan
Like · Reply · 2 · Yesterday at 6:28pm

மஹா சுமன்
கன பெருவெளியை அடைப்புக் குறியீட்டில் ஒடுங்கச் செய்யும் மனதோர சலனம்// இப்படிலாம் எழுதுறிங்களே. எப்படி நான் பதில் பின்னூட்டம் போட? வார்த்தைகளில் நளினமா? புதுமையா? அத்தனையும் பேரழகு. நன்றி
சரவணா ஹரி
Like · Reply · 4 · Yesterday at 6:30pm

மஹா சுமன்
ஹாஹா ஐயா Vasan Muthugani அரசியல் உண்மையை உடைத்துச் சொல்லிவிட்டீர்கள். நன்றி wink emoticon
Like · Reply · 1 · Yesterday at 6:31pm

மஹா சுமன்
இயற்கையன்னையின் எழில் எழில் பெரிதா? அதை எடுத்தியம்பும் உங்கள் அழகுத் தமிழின் உவமைகளின் கனம் பெரிதா? கருநாகம் இட்ட நெடுங்கோடு, பச்சைபட்டை ஓரம், கருமலை குடைகள், வெளிர்மழைத் தூறல், மஞ்சுப் புகை சாமரசம். இவற்றை கொண்டாசும் இளந்தென்றல் ஏகாந்தம்..... எனக்கு இப்போதே அங்கு செல்லவேண்டும் போலுள்ளதே. நன்றி சரவணா ஹரி
Like · Reply · 5 · Yesterday at 6:35pm

மஹா சுமன்
அன்புச் சகோதரா Ram Kamal நெடுஞ்சாலை விளக்காய் நினைவுகள். நீளும் தொடுவானாய்க் காதல், தெறிக்கும் பனித்துளியாய் தேடல். காதலின் தேடலில் பேரானந்தம் கொள்ளும் சுகானுபவம் உனது எழுத்தில். பேரழகு. நன்றி smile emoticon
Like · Reply · 4 · Yesterday at 6:37pm

Shwathi Spb
Neeenda...nediya....payanam........
Unlike · Reply · 2 · Yesterday at 6:37pm

மஹா சுமன்
விரல் கோர்த்து விழி சேர்த்து மலை மேல் கொஞ்சி விளையாடும் குட்டி குழந்தையாய் குதூகல மனம் படைத்தீரோ நட்பே. நன்றி Sri Ramya
Like · Reply · 3 · Yesterday at 6:38pm

மஹா சுமன்
ஆம் நட்பே Shwathi Spb
Like · Reply · 2 · Yesterday at 6:38pm

Prema Latha
மலையின் குளுமை சேர்ந்த அழகில் மதி மயங்கிய மனம் வர்ணிக்க வார்த்தைகள் அற்று திகைத்து நின்றது பிள்ளையாய் மாறி...
Unlike · Reply · 5 · Yesterday at 7:04pm

Suba Kathir பாதையில் பாரம் ஏற ஏற பசுமைகள் மறையும்
மீதமிருக்கும் நினைவுகளில் மட்டுமே நீ..
Unlike · Reply · 6 · Yesterday at 7:26pm

நக்கீரன் மகள்
எத்தனை தோல்விகள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை கவலைகள்
அத்தனையையும் சுமந்தும்
இந்த பயணம் நகரும்
பசுமையைத்தேடி அசையாத
நம்பிக்கையால்
Unlike · Reply · 4 · 23 hrs

மஹா சுமன்
மயங்கிய மனம் பிள்ளையின் குணம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும் நிதம், அருமை நட்பே Prema Latha
Like · Reply · 3 · 23 hrs

மஹா சுமன்
மனபாரம் கொடியதென இரண்டே வரிகளில் புலப்படுத்தியது அழகு சகோ Suba Kathir
Like · Reply · 2 · 23 hrs

மஹா சுமன்
ஆம் நட்பே நக்கீரன் மகள். நம்பிக்கை மட்டுமே வாழ்வை நகர்த்தக்கூடும், பசுமையான வளத்தை நோக்கி, நன்றி
Like · Reply · 2 · 23 hrs

Sundari Manalan
Travel pannuam pothu yetho oru ninevegal illamal payanagal illai
Unlike · Reply · 4 · 23 hrs

Arunachalam Thiyagarajan
பாதை குளுமையாகும் பொழுது பயணம் இனிமையாகிறது, வாழ்க்கையைப் போல
Unlike · Reply · 5 · 23 hrs

Sundari Manalan
Iyraikai eilil oru sugumana payanthil un nayagabam enaku thalattu
Unlike · Reply · 2 · 23 hrs

Aruna Lma
பாரம் தூக்கிகள்
பயணிக்கின்றன
முடிவில்லை
பாதையும்
நகராமல்
பயணிக்கிறது
காலத்தைக்கடந்து
பல கதைகளைச்
சுமந்து
களைப்பேயில்லை
பயணத்தில்
Unlike · Reply · 6 · 20 hrs

Subashini Suba
மலைப்பாதையிலே
மழைச்சாரலாய்..மனதுக்கு
பிடித்தவனின் இனிய
நினைவுகளிலே இருந்து
மீள மனமில்லாமல்
பயணம் நீள மனம்
ஏங்குதே...

கடந்து போகும் எதும்
கண்ணுக்கு தெரியலயே..
இனிய நினைவுகளோடு
இளையராஜா இன்னிசையும்
இணைந்தால் பயணம்
இன்னும் இனிமையே...
Unlike · Reply · 9 · 20 hrs

Jagan Nathan
இன்று தொடங்கிய எங்கள் தொலைதூர பயணத்தில் பச்சை பசேலென புள்வெளிகள் பசுமையான காற்றும் ஆள் அரவமில்லா பாதைகளில் காட்டு விலங்குகளும் சாலையோரங்ளில் சகஜமாய் திரிய அவைகளையும் சாமர்த்திமாய் கடந்து ஒரு நிறுத்தத்தை தேடி பல் துலக்கியும் துலக்காமலும் குளித்தும் குளி...See More
Unlike · Reply · 6 · 18 hrs · Edited

Mohammed Usman முதலில் இந்த புகைப்படம் பற்றி...
பெங்களூரையும், மும்பையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 ல் பெல்காம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 50 கிமீ சுற்றளவில் கர்நாடக மாநிலத்தின் புதிய விதான் சௌதா ( சட்டசபை) அமைந்துள்ளது.
Unlike · Reply · 9 · 16 hrs

Mohammed Usman என் மனைவி, நண்பர்கள் எல்லோரையும் விட என்னுடன் அதிக நேரம் இருக்கும் தோழன் லாரி அதை பற்றியே எழுதுகிறேன். வாய்ப்பளித்த நண்பனுக்கு நன்றி!
Unlike · Reply · 5 · 16 hrs

Mohammed Usman
#நான்_பாரஊர்தி...

பின்புறம் பாரங்களும்
முன்புறம் கனவுகளும்
சுமக்க பிறந்தவன்...

வாழக்கை ஒரு வட்டம்
என்பதற்கு வாழும் உதாரணம்...

என் வாழ்வை மட்டுமல்ல
எதிரில் வருபவர்களின்
வாழ்வை தீர்மானிப்பதும்
என் வட்டம் தான்...

என் விருப்பம் பற்றிய அக்கறை ஏதுமின்றி ஏற்றப்படும் சுமைகளுக்கு
மத்தியில் நான் விரும்பி
சுமக்கும் ஒரு சுமையுண்டு..

என்னை இயக்குபவர்கள்
தமது பிள்ளைகளுக்கு வாங்கும்
திண்பண்டங்கள்...

இறக்கத்தில் வேகமாகவும்
ஏற்றத்தில் நிதானமாகவும்
கடப்பதால் மனிதர்களுக்கு முன்மாதிரி...

நான் டீசல் குடித்து விட்டு பயணம் செய்பவன்..

ஓட்டுநர்களின் சந்தோஷமோ
துக்கமோ முதலில் பகிரப்படுவது என்னிடம் தான்...

நான் கலாச்சார பரப்பி..
நான் சேவகன்...
இரவு பிரயாணி..
வழிபோக்கன்..
கடமையாற்றுபவன்..

பாதைகள் பல ஆனாலும்
பயணம் மட்டுமே லட்சியம் எனக்கு...

இறக்கும் வரை எப்போதும் உழைப்பவன்...
Unlike · Reply · 11 · 15 hrs

மஹா சுமன்
ஊர்தியின் உணர்வுகள் இப்படித்தான் இருக்குமோ? மனிதர்களுக்கு முன் மாதிரியாக, இறக்கும்வரை உழைத்துக் காண்பிப்பவனாக// செம்ம நண்பா
Like · Reply · 5 · 15 hrs

Rajesh Padman சொல்லும் அளவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை நண்பா, மனக்கண்ணில் படம் மட்டும் நம்பிக்கையாய்...!.
Unlike · Reply · 5 · 13 hrs

Vasu Devan
பனி சொல்லும் முகடும் தூரத்தே
இனி வெல்லும் சுவடும் பார்த்தே

நெடிதே நீண்டாலும் நேர்மைப்பாதையே
கடிதே யானாலும் ஓர்மைப்பாதையே

அடுக்கடுக்காய் வலிபாரம் சுமந்தாலும்
வடுக்கலில்லா வாழ்க்கை சுகமில்லை

முன்னேறேச் செல்லும் சுமைதாங்கியாய்
முடிவுறாப் பயணத்தின்
மைல் கல்லாய் தொடருகிறது...
Unlike · Reply · 2 · 7 hrs · Edited

சி வா Thoovitean.. Paathukonga..
See Translation
Unlike · Reply · 1 · 7 hrs

Ramesh Srirangam
மேக தேவதை மடியில் தவழ..
வேக பாதை அமைத்தது யாரோ ?
Unlike · Reply · 1 · 4 hrs

Meena Kumari
எண்ணச்சுமை

இதமான அதிகாலையிலே
வகிடெடுத்து வாரிய
தலைமகளின் தார்பூச்சு சாலையிலே,
தலைபாரம் மிகக்கொண்டும்,
தளராது சுமந்து செல்லும் ஊர்திகளை உந்தும் சக்தியைவிட

உறங்கா சித்தத்துடன்
ஊர்தி செலுத்தி,நிலைசேர்த்தபின்

தனை நோக்கி
யிருக்கும் தன்னுயிர் சேரும் நிலையெண்ணி
வண்ணக்கலவையாம்
வானும் மண்ணைவிட
அவன் எண்ணக் குழம்பதனடர்த்தி அதிகம்
Unlike · Reply · 1 · 4 hrs

Devasahayam · Friends with ஞெகிழம் and 1 other
பசுமை போர்வை குளுமை காலை நேராய் நால்வழி சாலை பயணம் மிகவும் இனிமை அதனினும் இனிமை குடும்பமாய் மகிளுந்து பயணம் !
Unlike · Reply · 1 · 3 hrs

மஹா சுமன்
ஆம் அக்கா Sundari Manalan. நினைவில்லா நேரமேது
Like · Reply · 3 hrs

மஹா சுமன்
வாழ்க்கையின் பயணம் இனிதாக பாதை இலகுவாக வேண்டும். நல்ல கருத்து. நன்றி ஐயா Arunachalam Thiyagarajan
Like · Reply · 1 · 3 hrs

மஹா சுமன்
ஆஹா இயற்கை எழிலில் சுகமான பயணத்தில் உன் ஞாபகம் எனக்குத் தாலாட்டு// அழகுக்கா Sundari Manalan நல்ல கவிதை
Like · Reply · 3 hrs

மஹா சுமன்
காலங்கள் கடந்த பயணத்தில் பாதைகள் கைவசம் கணக்க்ற்ற கதைகள். அழகுக்கா Aruna Lma
Like · Reply · 1 · 3 hrs

மஹா சுமன்
வாகன ஓட்டிகளின் அனேக பயணத்தில் இன்னிசை ராஜாவின் உறவொன்றே பாலமாய், பல நினைவுகளின் தாளமாய்.. அழகு நட்பே Subashini Suba நன்றி smile emoticon
Like · Reply · 3 hrs

மஹா சுமன்
முடியாத பயணம் தீராத பாதை கலையாத கனவுகள் என அனைத்தும் நீண்டிருக்க அகத்தே அன்புடையோரின் வாழ்வை குறித்த கவலை கனத்திருக்க கடினமான பயணமே. நன்றி நண்பரே Jagan Nathan smile emoticon
Like · Reply · 1 · 3 hrs

மஹா சுமன்
பாதையை குறித்த தகவலுக்கு நன்றி நண்பா Mohammed Usmansmile emoticon
Like · Reply · 2 hrs · Edited

மஹா சுமன்
வாகனத்தின் மனமறிய வாகனத்தை தன்னில் ஒரு பாகமாய் காதலிப்பவனாலேயே முடியும். இயக்குபவரின் மழலைகளுக்கு உள்ள தின்பண்டங்களை மகிழ்வுடன் சுமப்பேனென ஆரம்பித்ததிலிருந்து மனிதர்களின் முன்மாதிரியெனவும் சுகதுக்கங்கள் பகிரப்படும் நண்பன் தானெனவும் இலட்சியவாதியெனவும் வாகனத்தின் மதிப்பிட முடியாத பண்புகளை எடுத்தியம்பிய விதம் மிக அழகு நண்பா Mohammed Usman. லவ் யூ
Like · Reply · 2 · 2 hrs · Edited

மஹா சுமன்
சொல்ல ஒன்றுமில்லையெனச் சொல்லியே நண்பன் சொல்லும் சொற்களின் வலிமை கூடிப் போகிறது. நன்றி நண்பா Rajesh Padman
Like · Reply · 1 · 2 hrs

மஹா சுமன்
அடுக்கடுக்காய் வலிபாரம் சுமந்தாலும்
வடுக்களில்லா வாழ்க்கை சுகமில்லை// சூப்பர் நண்பரே Vasu Devan மரபுக் கவிதைகளில் மின்னுகிறீர்
Like · Reply · 1 · 2 hrs

மஹா சுமன்
தூவியதெங்கே நண்பா #சிவா
Like · Reply · 2 hrs · Edited

மஹா சுமன்
நன்றி நட்பே Vidya Ram ஆனால் கமெண்ட் புரியவில்லை
Like · Reply · 2 hrs

மஹா சுமன்
மேக தேவதை, வேகப் பாதை, ஆஹா அழகு நண்பரே Ramesh Srirangam
Like · Reply · 2 hrs

மஹா சுமன்
மஹா சுமன் அழகுறச் சொன்னிங்க நட்பே Meena Kumari வாகனத்தின் உந்து சக்தியை விட வாகன ஓட்டியின் குடும்பத்தின் நிலையெண்ணி வாடுமவன் எண்ணத்தின் அடர்த்தி அதிகமே, நன்றி smile emoticon
Like · Reply · 2 hrs

மஹா சுமன்
மஹா சுமன் குடும்பமாய் மகிழுந்து பயணம் இனிமைதான் நண்பரே Devasahayam ஆனால் அந்த கனரக வாகனத்தின் சுமையை விட அதை இயக்குபவனின் இதயச் சுமையும் அதனழகும் அதிகமல்லவா? நன்றி

Like · Reply ·

5 comments:

 1. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.....www.bloggersmeet2015.blogspot.com...வர்றீங்கதானே...

  ReplyDelete
 2. ஆஹா மகிழ்ச்சி..

  ReplyDelete
 3. ஆஹா மகிழ்ச்சி..

  ReplyDelete
 4. எங்கயோ தேடி இங்கு வந்தேன்

  ReplyDelete
 5. பெரும்பயண
  பாதையில் தேடுகிறேன்
  எங்கும் காணவில்லையே
  இங்கு தவிர😯

  ReplyDelete