Friday 4 September 2015

இதுவும் நன்மைக்கே!



சிறு வயதில் நான் படித்த ஒரு கதை. உங்களுக்கு அறிந்திருக்கலாம், எனினும் ஒரு முறை நீங்களும் படிக்கலாம்.
ஒரு நாட்டின் மந்திரிக்கு எப்போதும், இதுவும் நல்லதற்கே எனச் சொல்லும் பழக்கம். ஒரு நாள் ராஜாவும், மந்திரியும் காட்டுக்கு வேட்டைக்குப் போன போது, ஒரு மர வேர் தடுக்கி ராஜா விழுந்து விட்டார். ராஜாவின் கால் கட்டை விரலில் பலத்த காயம் ஏற்படட்து. மந்திரி, “இதுவும் நன்மைக்கேஎனக் கூறிவிட்டார்.
ராஜாவுக்கு கோபம் வந்து, “நான் உம்மை சிறையிலடைக்கிறேன், அதில் என்ன நன்மை எனக் கூறுங்கள்எனக்கூறி மந்திரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மந்திரியும் சிறையிலானார். மந்திரி மீண்டும், “இதுவும் நன்மைக்கேஎன்று கூறிக் கொண்டு சிறை சென்றார்.
அடுத்த முறை ராஜா வேட்டைக்குப் போகும் போது, மதி மந்திரி இல்லாமல் பயணமானார். அடர்ந்த காட்டில் திடீரென தோன்றிய காட்டுவாசிகள், ராஜாவைப் பிடித்து கொண்டு போய் அவர்கள் கூட்ட்த்தில் நிறுத்தி, அவரை பலியிட தீர்மானித்தனர். ஆனால், கால் கட்டைவிரல் சேதப் பட்டிருப்பதை பார்த்து, பலியிட முடியாதெனக் கூறி அவரை விடுவித்தனர்.
ராஜா மிகுந்த சந்தோஷத்துடன் வந்து அரண்மனையில் காவலரை அழைத்து மந்திரியை விடுவிக்க ஆணையிட்டார்.
வந்த மந்திரியிடம், “மந்திரியாரே, அன்று நீர் சொன்னது போல், அந்த கால் காயம் நல்லதற்க்காக ஆகிவிட்ட்து. இல்லையேல் நான் காட்டுவாசிகளிடம் பலியாகி இருப்பேன்என்று கூறினார்.
பின்னர் கேட்டார், “ஆனால் நீர் சிறைக்கு செல்லும்போதும் இதுவும் நன்மைக்கே என்று கூறினீரே, அது தவறல்லவா?” என்று கேட்டார்.
அப்போது மந்திரி, “இல்லை அரசே, அதுவும் நன்மைக்கே, இல்லையென்றால் நானும் தங்களுடன் வேட்டைக்கு வந்திருப்பேன், காயமில்லாத என்னை பலி கொடுத்திருப்பார்கள் அந்த காட்டு வாசிகள்என்று கூறினார்.

இதுவும் நன்மைக்கே!

No comments:

Post a Comment