Thursday, 24 October 2013

உறக்கம்



விழித்திருக்கும் பொழுதுகளிலும்
மனம் விழித்திருக்க மறுக்கிறது.
உன் நினைவுகளின் சுமைகளை
உள்பொதிந்து
உயிருடன் கலந்து
என் நினைவறைகளில்
நிறைத்ததாலே
நித்தமும் உன்
நிழலையேனும் தேடி
கனவுலகில் வசிப்பதால்
உடல் உறக்கம் தொலைத்து,
மனம் உறங்கியே கிடக்கிறது.

No comments:

Post a Comment