Tuesday, 22 October 2013

இல்லாத ஒன்று

















எனக்கில்லா ஒன்றை
உனதென்று ஆக்கிக்கொள்,
உனக்கில்லா ஒன்றை
எனதென்று விட்டுச் செல்,
மறையாத நினைவுகளின்
படிமங்களில் சிக்காமல்
இடையிடையே மறந்து
மீண்டும் நமைக் கண்டெடுக்க,
இல்லாத ஏதோ ஒன்று
எப்போதும் வேண்டுமன்றோ?

No comments:

Post a Comment