Saturday, 19 October 2013

கனவை கலைக்கின்றேன்.





















எங்கோ மறைந்திருந்த
மேகத்துணுக்குகளில்
என்னை மறைத்துக்கொள்ள
துடிக்கின்றேன்.

அலையும் பஞ்சினிடை
என் நினைவை
அடகு வைக்கின்றேன்.

காலப் பந்தலிலே
பூ பறித்து
நிழலில் விதைக்கின்றேன்.

நிலவின் முகவரியும்
மறந்து
இரவில் விழிக்கின்றேன்.

கருணை மனு எழுத
மனமின்றி
கனவைக் கலைக்கின்றேன்.

No comments:

Post a Comment