Monday, 21 October 2013

ஏன் இப்படி?



எழுதிய கடிதத்தின் முகவரியை
எச்சில் தொட்டு 
அழித்து விட்டாய்.
தனிமை சிறையிலெனை
தவிக்க வைத்து பூட்டிவிட்டாய்.

கனவினில் கூட
கருமையை மட்டும் 
படர விட்டாய்.
ஒருமுறை கூட
எனை நினைப்பதை 
மறந்துவிட்டாய்.

சுமையெனில் முன்பே
சொல்லி இருக்கலாமடி,
சொந்தமென்று நினைந்த நெஞ்சை
சேதப்படுத்தலாமோடி?

No comments:

Post a Comment