Wednesday, 16 October 2013

பொன் வண்டு















வெளிச்சப் பூக்களை
நீர் முத்துக்களுடன் கோர்த்து
மேனியில் சிதற விட்ட
பச்சை இலை.

மழைத் துளியின்
கனம் கண்டு
மனம் நொந்து
இலைக்கடியில்
தவமிருந்த
பொன் வண்டு.

தீரா மழையும்
தீர்ந்து போக
வலம் வந்து
மழைக்கும்,
காற்றுக்கும்,
இலையசைந்தும்
தான் விலகாக் காதலுடன்
இலை பற்றி
வீற்றிருக்கும்

என் வண்டு!

No comments:

Post a Comment