Monday, 21 October 2013

வாழ்ந்திடு



விழியிமை மூடாமலென்
விழி பார்த்திரு,
சுவையெனும் மதுவுடன்
இதழ் தோய்த்திரு.
பனிமலர் விரல்கொண்டு
கரம் கோர்த்திடு.
தனிமையை இனம் கண்டு
உடன் கொன்றிடு.

உயிருடன் உயிரென
உனைச் சேர்த்திடு.
சிறகுகள் கனமென்று
எனில் மூழ்கிடு.
உறவுகள் தடையெனில்
உடன் விலக்கிடு.
உனக்கென நானிங்கு
எனில் வாழ்ந்திடு!

No comments:

Post a Comment