Wednesday, 16 October 2013

நேசப் பார்வை

உன் நேசப் பார்வையில்
என்னுளம் மலர்ந்திடும்.
உன்னிதழ் விரிகையில்
என்மனம் மயங்கிடும்.
உன்கரத் தொடுகையில்
என்கரம் பூத்திடும்.
உன்னுளம் மகிழ்கையில்
என்னுயிர் நிலைபெறும்.

சுவையுரு இதழ்கனிச்
சுவையுடன் எனைத் தொட
சுகம்பெறத் துடித்தயென்
மனமதில் லயித்திட
இவைகளில் சுகம்பல
இருப்பினும் என்மனம்
ஏங்குதல் உன்மன
மகிழ்வையே அனுதினம்!

No comments:

Post a Comment