Thursday, 17 October 2013

மௌனம்

எனை கடந்து போன தென்றலிடம்
உன் மௌன மொழியை
மொழிபெயற்க்கச் சொன்னேன்.
சடுதியில் சென்று
அடுத்திருந்த
புஷ்பத்தின்மேல் படர்ந்து
பின்
என் நாசியைத் தழுவி
செவியில் செப்பியது,

“அன்பின் மொழி மௌனம்!”

No comments:

Post a Comment