Friday, 25 October 2013

இனியொரு நாள் தருவாயா?



தேடுமென் விழிப்பாதையிலுன்
நினைவுப்பூக்கள் பூத்திருக்க,
தெளிவிலா வானம் கூட
கருமேகப் பந்தலிட
குழலூதும் காடு தன்
குரலமர்த்திக் காத்திருக்க,
விளை நிலமும் விதை நெல்லும்
வியப்போடு சூழ்ந்திருக்க,
கன்றோடு பசு வந்து
கரவாமல் பார்த்திருக்க,
இயற்கையின் சூழலிலும்
இயல்பில்லா நாடகங்கள்.
இனியொரு நாள் தருவாயா
இயல்புகளை மீட்டெடுக்க?

No comments:

Post a Comment