Monday, 21 October 2013

அறியாதா?



















என்னையும் மீறி என்னுளம் நாடும்
உன்னையே தெரியாதா?
எல்லைகள் தாண்டி வன்முறை என்னுள்
நடப்பது புரியாதா?
உன் நலம் வேண்டி உருகிடும் நெஞ்சம்
உண்டெனத் தெரியாதா?
ஒவ்வொரு நாளும் உன்பெயர் சொல்லி
உயிர்ப்பது அறியாதா?

வஞ்சியுன் விழி பொங்கிடும் ஒளி
காரிருள் மறையாதா?
வசந்தமுன் வாசம், வாடுதென் சுவாசம்
வாழ்ந்திட உதவாதா?
கொஞ்சிடும் மொழி கொண்டவள் இனி
என்னவள் தெரியாதா?
கள்ளமே இலா பெண்ணவள் இனி
என்னுயிர் அறியாதா?

No comments:

Post a Comment