Wednesday, 16 October 2013

மகிழ்வெனும் நாயகன்


நானொரு ஆண்,
நீயொரு பெண்ணெனும்
நிலை கொண்டிலை நம் காதல்.
உன்விழிப் பார்வையில்
என்னிடர் மறைந்திட,
என்கரத் தொடுகையில்
உன்மனம் மகிழ்ந்திட
என்னிணை நீயென
உன்துணை நானென
நாம் கொண்ட காதலின்
நாயகன் மகிழ்வென
நானிலம் எங்கணும்
மகிழ்வதும் கூடிட
வாழ்தலில் இனிமை,
வளமும் காண்போம்!



No comments:

Post a Comment