Wednesday, 16 October 2013

தொலைந்தேன்

பிறப்பும் இறப்பும்
ஒன்றெனச் சொல்லி
பிரிதொரு நாளின்
பிரிதலை நினைத்தேன்!

விதைத்ததை முளைத்ததும்
அறுவடை செய்வதில்
பிரிவென சொல்லி
உருகிட உகுந்தேன்.

இயல்பாய் இருத்தலில்
சுகமென சொல்லி
இருத்தலை இயல்பென
ஆக்கிட முயன்றேன்.

உறவுகள் பிரிவதும்
உணர்வுகள் தொலைவதும்
சரியெனக் கொள்ளுதல்
வாழ்வெனக் கண்டேன்.

அன்பினைக் கொண்டு
உன்னுடன் வாழ
இனியொரு பயணம்
தொடங்கிட முனைந்தேன்.

வருவதும் போவதும்
வாழ்க்கையின் வரமென
அறிந்ததில் கசந்து உன்

அன்பினில் தொலைந்தேன்!

No comments:

Post a Comment