Tuesday, 22 October 2013

ஆழ்கடல் நீ!



ஆழ்கடல் நீ!
ஆம், அன்பெனும் ஆழ்கடல் நீ!
எத்தனை உயிரினங்கள் உன்னுள்
ஏகாந்தமாய் வாழ்கின்றன!

உடல் பெருக்கி,
உயிர் பெருக்கி,
வகைவகையாய் இனம் பெருக்கி,
இன்பமாய் வாழ்கின்றன.

உன்னால்
விலக்கப்பட்ட பல நீர்த்துளிகள்,
விண்ணில் மேகமாய் மாறி,
மீண்டும் மழையாய் மலர்ந்து,
உன்னுள் கலந்து பரவிட,

எஞ்சிய சில நீர்த்துளிகள்
குட்டையாய் தேங்கி,
அன்பெனும் ஆழ்கடலுக்காய்
ஏங்கி, ஏங்கி……….!

No comments:

Post a Comment