முன்செல்லும்
பெண்ணைக்கண்டு
நாக்கு
நீண்டு
எச்சில்
ஒழுகுவதை
துடைக்கக்
கூட அறியாத
தெரு
நாயைப்போல,
காமக்கண்
கொண்டு
கண்டவளை
அங்கேயே
மனத்தால்
கற்பழிக்கும்
காமுகனைப்போல,
பொது
இடங்களில்,
கூட்டங்களில்,
நடைபாதையில்,
வேண்டுமென்றே
உரசி,
தேகத்தில்
ஊசியேற்றும்
தெருப்பொறுக்கியைப்போல,
எச்சில்
இலைகளை நாடி
கண்ட
இலைகளில்
வாய்
வைக்கும்
கேவலப்
பிறவியைப்போல
பிறந்திட்ட
சிலருடன்தான்
நாமும்
இருக்கிறோம்.
பெண்மையை
நேசிக்கும்,
தாய்மையை
போற்றும்,
மென்மையை
காக்கும்,
நற்றமிழனாய்…!
No comments:
Post a Comment