Wednesday 16 October 2013

தெத்துப்பல்காரி

கனவுக் கவிதைகளின்
தனிமைப் பொழுதுகளில்
உலவும் தேவதையாய்
வந்தாய்!

உரிமை என நினைத்து
உதிர்ந்த சொல்லெடுத்து
தொடுத்த கவிமலரைக்
கவர்ந்தாய்!

இதயம் பூத்திருக்க
இமைகள் கோர்த்திருக்க
உலகம் நமது என
பகர்ந்தாய்!

உன்னில் நானிருக்க
என்னைத் தேடுவதாய்
என்னுள் பாவனைகள்
புரிந்தாய்!

வானம் தொலைவிருக்க
நானுன் அருகிருக்க
ஏனோ நிலவினிலே
ஒளிந்தாய்!

தெத்தும் பல்வரிசை
முத்துப் புன்னகையில்
என்னில் கோடி முறை
மலர்ந்தாய்!

மாற்றம் தேடி மனம்
வாடிக் களைத்த எனை
காதல் நீர் தெளித்து
காப்பாய்!

நாளும் பாடியுனை
நாடி வந்த யெனை
காதல் தேன் மழையில்

தோய்ப்பாய்!

No comments:

Post a Comment