Wednesday, 23 October 2013

விழி வழியே




தனித்தீவின் கரையோரம்
உனைக்காண தவித்திருந்தேன்.
துணைதேடும் மனம் சோர்ந்து
ஒருபாதி விழித்திருந்தேன்.
குதித்தோடும் நண்டோடும்
நெடு நேரம் கதைத்திருந்தேன்.
குரல் கேட்ட நொடிப் போதில்
குழலோசை என நிமிர்ந்தேன்.

புறம் தொட்ட மலர் செண்டு
விரல் பட்டு என மகிழ்ந்தேன்.
பகல் நேர பனியாக
பருவத்தின் கரை அடைந்தேன்.
அகம் தொட்ட அன்பான
விழியோரம் எனை மறந்தேன்.
அலையோரக் கரையாக
அமிழாமல் மிதந்திருந்தேன்.

இதமான மலர் சுவாசக்
காற்றோடு எனை கலந்தேன்.
இருள் நீங்கும் பகலாக
மனம் பூக்க மலர்ந்திருந்தேன்.
புதிதான மனம் கொண்டுன்
கனிவான முகம் கண்டேன்
புது நாளின் அழகெல்லாமுன்
விழி வழியே கண்டிடுவேன்!

No comments:

Post a Comment