Monday 21 October 2013

ஓடத்தின்மேல் குருவி




















சுழித்துக்கொண்டோடும் ஓடையின்மேல்
ஆடிக்கொண்டிருந்த ஓடத்தில்
அமர்ந்திருந்த ஊர்குருவி,
பறப்பதை மறந்து
பாடலொன்றை
பாடியபடி இருந்தது.

ஓடிச்செல்லும் ஓடை
சென்றடையும் அலைகடல்மேல்
அத்தனைக் காதல்
அந்த ஊர்குருவிக்கு.

பறந்து சென்று
பாயும் நீரோடை
கலக்கும் ஆழ்கடலைக்
காணலாம்.

யார் சொன்னார்கள்?
ஓடத்திலமர்ந்தால்
ஒரு நாள்
கடலையடையலாமென?

ஆடிய ஓடம் ஓடுவதாக
அதற்கோர் கற்பனை.
அதற்காக
அதன் இயல்பை இழந்து
பறப்பதை மறந்து
காத்துக்கிடக்கிறது.

ஓடாத ஓடத்தின்மேலமர்ந்து
ஒரு நாளும் ஊர்குருவி
காதலிக் கடலை
அடைய இயலாதென
யார் இனி
எடுத்து சொல்லப் போகிறார்கள்?

2 comments:

  1. வலைச்சரத்தில் -
    http://blogintamil.blogspot.com/2013/11/blog-post_17.html
    அனிதா ராஜ் அவர்களின் அறிமுகம் கண்டு வந்தேன்.

    ஓடம் ஓடாதென
    ஊர்க்குருவிக்கு யார் இனி
    எடுத்து சொல்லப் போகிறார்கள்?..

    மனம் கனக்கின்றது!..
    கவித்துவம் மிக்க கவிதை.. வாழ்த்துக்கள்!..

    ReplyDelete