Sunday 22 December 2013

நண்பேண்டா!!!!

சுரேஷ் புதிதாக கோழிப் பண்ணை தொடங்க ஆசைப்பட்டான். அவனது நண்பன் ரமேஷ் ஆஸ்திரேலியாவிலிருந்து கடந்த வாரம்தான் இந்தியா திரும்பி இருந்தான். ரமேஷைக் காணச் சென்ற சுரேஷ் தான் புதிதாகத் தொடங்க இருந்த கோழிப் பண்னைக் குறித்து சொன்னபோது, ரமேஷ், “அருமையான ஐடியா சுரேஷ், எனக்கும் ஆஸ்திரேலியாவில் கோழிப்பண்ணை நடத்திய அனுபவம் இருக்கிறது. நீ தொடங்கு, நான் ஆலோசனை கூறுகிறேன்” எனக் கூற, சுரேஷ் சந்தோஷமாக 200 கோழிகளை வாங்கி தனது பண்ணையில் விட்டான். வளர்ந்து சிறிது லாபம் ஈட்டிக் கொடுக்கும் வேளையில், 100 கோழிகள் திடீரென்று நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டன.
பதறிய சுரேஷ், ரமேஷிடம் சென்று, 100 கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன எனக் கூற, ரமேஷ், “பதற வேண்டாம், இந்த மருந்தைக் கொண்டு சென்று மீதமுள்ள 100 கோழிகளுக்கு கொடு” எனக் கூற, சுரேஷ் மருந்தை எடுத்துச் சென்று மீதமிருந்த 100 கோழிகளுக்குக் கொடுத்தான். மறு நாள் பார்த்தால் அந்த 100ல் 50 கோழிகள் இறந்து கிடந்தன.
மிகுந்த வேதனையுடன் தனது நண்பன் ரமேஷிடம் கூற, “இந்த மருந்தைக் கொண்டு கொடு நண்பா” என ரமேஷ் கூறி வேறு மருந்தை கொடுத்தான்.
அந்த மருந்தைக் கொண்டு மீதமுள்ள 50 கோழிகளுக்குக் கொடுத்த சுரேஷ், அடுத்த நாள் பார்க்கையில் மீதமிருந்த 50 கோழிகளும் இறந்து கிடப்பதைப் கண்டான்.
மிகுந்த ஆவேசத்தோடு, ரமேஷைச் சென்று கண்ட சுரேஷ், “ஏண்டா, இப்படி பண்ணின? என் எல்லா கோழிகளும் இறந்து விட்டன” எனக் கூறி ரமேஷ் சட்டையைப் பிடித்தான்.
ரமேஷ் சிறிதும் பதட்டப்படாமல், “அடடா, உன் அனைத்துக் கோழிகளும் இறந்து விட்டனவா? என்னிடம் இனியும் ஐடியாக்கள் உள்ளனவே! என்ன செய்வது?” என்றான்.

(நண்பேண்டா!!!!)

No comments:

Post a Comment