Sunday, 15 December 2013

பூரண அழகி


உன் ஒவ்வொரு நேர உணர்வையும்
ஓரோரு குடுவையில்
சேர்த்துவைக்க முயன்றேன்.
கோபமோ, தாபமோ,
அழுகையோ, ஆனந்தமோ,
சிலிர்ப்போ, சலிப்போ,
வியப்போ, சகிப்போ,
எல்லாம் வழித்தெடுத்து
வைத்தபோதுதான் தெரிந்தது,
அவற்றிலெல்லாம் நீ அழகில்லை.
வெளிப்புறத்தில்
சிதறி கிடக்கும்
ஆழ் நிலை சிந்தனையுடன் கூடிய
பெண்மையின் பிரமிப்பில்தான்
நீ பூரணமான அழகியென்று!

No comments:

Post a Comment