Tuesday 10 December 2013

அறிவில்லா நாய்

அந்த கடையில் கடைக்காரரும், மற்றொரு ஆளும் நின்று கொண்டிருந்த போதுதான், அந்த அதிசய நாய் வந்தது. அதன் வாயில் ஒரு காகித துண்டு இருந்தது. கடைக்காரர் அதை பார்த்துவிட்டு, காகித துண்டை வாங்கி பார்த்தார். அதில் சில பொருட்களின் லிஸ்ட் இருந்தது. கடைக்காரரும் பொருட்களை எடுத்துக் கொடுக்க நாயும் கழுத்தை ஆட்டி கழுத்தில் கட்டி தொங்க விடப்பட்ட பணத்தைக் காண்பிக்க கடைக்காரர் அதைப் பெற்றுக் கொண்டார்.
நாய் திரும்ப பொருட்களுடன் நடக்கத் தொடங்கியது. அந்த இன்னொரு மனிதன் இதை பார்த்து அதிசயித்து அந்த அதிசய நாயின் பின்னே நடக்கத் தொடங்கினார். நாய் அழகாக தெரிந்த பாதை வழி நடந்தது. எதிர் வரும் மனிதர்களையும், வாகனங்களையும் கூட அழகாக தவிர்த்து நடந்த்து. சாலையின் சிக்னலில் கூட நின்று பச்சை விளக்கை பார்த்து பின்னர் சாலையை கடந்து போனது.
இவ்வளவு அதிசயத்தை பார்த்த அந்த நபருக்கு ஆச்சரியம் தாளவில்லை. பின்பற்றி போனார்.
பின்னர் ஒரு வீட்டின் காம்பவுண்ட் முன்னால் போய் நின்று கதவை முட்டித் தள்ளி திறந்து வீட்டுக் கதவின் அருகில் போய் நின்றது. சிறிது நேரம் நின்று விட்டு பின்னர் வேகமாக வீட்டின் இடது பக்கத்தில் ஓடி அங்கிருந்த ஒரு அறையின் கதவின் அடுத்து நின்று குரைத்தது. பின்னர் ஓடி வந்து முன் கதவின் முன் நின்றது.
கதவை திறந்த நல்ல தடிமனான மனிதன் ஒருவன், நாயை பார்த்து, “உனக்கு எவ்வளோ சொன்னாலும் அறிவிருக்காதா? சாவிய எடுத்துட்டு போனு சொன்னா மறந்துட்டு போய் என் உயிர வாங்கறியே!” என திட்டிக்கொண்டே அந்த நாயையும் பொருட்களையும் வீட்டினுள் விட்டு கதவை மூடினார்.

No comments:

Post a Comment