Wednesday, 18 December 2013

வெளிச்ச சுவாசம்

வலிந்து அடைக்கப்பட்ட இரவுகளின்
சிறை பிடிக்கப்பட்ட பொழுதுகள்,
இரவல் தர வழியுமின்றி,
உதிரும் கனவுகளை
உள்ளத்துக்குள் தெளித்தபடி,
உறங்கிப் போவதாய்
பாவனை செய்தபடி,
பயணிக்கின்றன...!
விடியும் பொழுதுகளேனும்
வெளிச்ச சுவாசத்தை
மீட்டுத் தருமா?

No comments:

Post a Comment