Monday 9 December 2013

இந்தியா



மாற்றதிற்க்காய் பரிதவிக்கும் இந்தியா

இப்போது வெளியான தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு கருத்தையே நினைவு படுத்துகின்றன.
தமிழக எதிர்கட்சி தில்லியில் போட்டியிட்ட 11 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 2285. ஏர்காடில் நோட்டா வோட் பதிவானது 4431. மக்கள் அரசியல் கட்சிகளின் பாதிப்பிலிருந்து வெளிவர துடிப்பது உண்மை.
தில்லி சட்டமன்ற தேர்தலில் புதிதாக தொடங்கபட்ட ஆம் ஆத்மி கட்சி பிஜெபி யை விட 4 இடங்களே குறைவாகப் பெற்றுள்ளது.
அந்த கட்சியின் கேஜ்ரிவால், தில்லி முதலமைச்சரை 22000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் தற்போதைய எதிர்கட்சியும், இப்படித்தான் முன்னேறியது.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பான மாற்றத்தை, வாழ்க்கை முன்னேற்றத்தை, இந்த கட்சிகள் கிடைத்த வாய்ப்பை உதறி வீணடிக்கின்றன.
இந்தியா மாற்றத்தை விரும்புவது உண்மை.
அது எந்த அரசியல் கட்சியிலிருந்தோ, அரசியல் இல்லாத அமைப்பிலிருந்தோ வரவில்லையெனில் நோட்டா வாக்கு அத்தனைக் கட்சிகளையும் முந்தி நிற்க்கும்!
(இது எந்த அரசியல் கட்சியையும் சார்ந்த பதிவல்ல. எனக்கு எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றே. அரசியல் சாக்கடையில் நீந்தும் கொடூர திமிங்கிலங்கள்)

No comments:

Post a Comment