அரங்கத்தினுள்ளே
ஒளிமழையும், அதிர்வலையும்
சூழ்ந்திருக்க,
ஆரம்ப வரிசையிலே
குளிர் மனத்தோடிருந்தேன்.
மேடையில் தோன்றிய
மின்மினிப் பூச்சிகள்
கண்ணையும், கருத்தையும்
கவர்ந்தன,
ஒளிர்ந்தன,
மகிழ்ந்தன.
அடுத்ததாய் என்னவள்,
பாடப்போகிறாள்,
அவளின் திறனும்,
தீங்குரலின் மென்மையும்,
அவளறிய நானுரைக்க,
அதுவரை பாடலை
எனக்கு மட்டும் பாடியவள்,
அன்றுதான்
அனைவருக்குமாய்,
அரங்கத்தில் பாடப்போகிறாள்.
முந்திய இரவில்,
எத்தனை சிணுங்கல்,
எத்தனை பதுங்கல்,
என்னுள்ளே ஒடுங்கல்,
என் தளிரே,
உன் குரலை உலகறியட்டும்,
எழுந்து வா,
இனிமை நீயென
காற்றில் மிதந்து வா!
நம்பிக்கை ஒளியேற்ற,
நாணம் விடுத்து,
துணிவில் பிறப்பெடுத்து,
வந்தனள் மேடையில்,
பாடினள் பாடலை.
அத்தனை இனிமை,
அரங்கம் அதிர,
பன்னீராய் பாராட்டு
தெளிக்கப்பட்டது.
என் மனவானில்
ஆயிரம் சூரியனும்,
அடைமழையும்,
கோடி குளிர் நிலவும்
கொஞ்சிக் குலாவின.
எனினும் எனக்கோர் குறை.
என்னையவள்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
எப்படி எனையவள்
மறந்தாள்?
மாலையில் வீடு வந்தவள்,
அகம் நுழைந்து,
எனைக் கண்டதும்,
எங்கிருந்தோ அருவி
பிரவாகம் கண்டது.
அடுத்த கணம்
என்னகத்தே இருந்தாள்.
இயல்பை இழந்தாள்,
பிறர் இருப்பை மறந்தாள்.
என்னுள் ஒட்டிக் கொண்டு
என்னுள் கரைந்தாள்.
மகிழ்ச்சியின் உச்சத்தில்
மலர்ந்தேன் நான்.
வினவினேன்,
என்னைக் காணாதது ஏனென,
“என்னுள்ளத்தே
எந்நேரமுமுனைக் கண்டதனால்
வேறெங்கும் தேட
நான் நினைக்கவில்லை!
என் பாடலாய்,
பாடலின் ஜீவனாய்,
எங்கும் நிறைந்த உனை
ஏன் தேட வேண்டும்?”
ஒளிமழையும், அதிர்வலையும்
சூழ்ந்திருக்க,
ஆரம்ப வரிசையிலே
குளிர் மனத்தோடிருந்தேன்.
மேடையில் தோன்றிய
மின்மினிப் பூச்சிகள்
கண்ணையும், கருத்தையும்
கவர்ந்தன,
ஒளிர்ந்தன,
மகிழ்ந்தன.
அடுத்ததாய் என்னவள்,
பாடப்போகிறாள்,
அவளின் திறனும்,
தீங்குரலின் மென்மையும்,
அவளறிய நானுரைக்க,
அதுவரை பாடலை
எனக்கு மட்டும் பாடியவள்,
அன்றுதான்
அனைவருக்குமாய்,
அரங்கத்தில் பாடப்போகிறாள்.
முந்திய இரவில்,
எத்தனை சிணுங்கல்,
எத்தனை பதுங்கல்,
என்னுள்ளே ஒடுங்கல்,
என் தளிரே,
உன் குரலை உலகறியட்டும்,
எழுந்து வா,
இனிமை நீயென
காற்றில் மிதந்து வா!
நம்பிக்கை ஒளியேற்ற,
நாணம் விடுத்து,
துணிவில் பிறப்பெடுத்து,
வந்தனள் மேடையில்,
பாடினள் பாடலை.
அத்தனை இனிமை,
அரங்கம் அதிர,
பன்னீராய் பாராட்டு
தெளிக்கப்பட்டது.
என் மனவானில்
ஆயிரம் சூரியனும்,
அடைமழையும்,
கோடி குளிர் நிலவும்
கொஞ்சிக் குலாவின.
எனினும் எனக்கோர் குறை.
என்னையவள்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
எப்படி எனையவள்
மறந்தாள்?
மாலையில் வீடு வந்தவள்,
அகம் நுழைந்து,
எனைக் கண்டதும்,
எங்கிருந்தோ அருவி
பிரவாகம் கண்டது.
அடுத்த கணம்
என்னகத்தே இருந்தாள்.
இயல்பை இழந்தாள்,
பிறர் இருப்பை மறந்தாள்.
என்னுள் ஒட்டிக் கொண்டு
என்னுள் கரைந்தாள்.
மகிழ்ச்சியின் உச்சத்தில்
மலர்ந்தேன் நான்.
வினவினேன்,
என்னைக் காணாதது ஏனென,
“என்னுள்ளத்தே
எந்நேரமுமுனைக் கண்டதனால்
வேறெங்கும் தேட
நான் நினைக்கவில்லை!
என் பாடலாய்,
பாடலின் ஜீவனாய்,
எங்கும் நிறைந்த உனை
ஏன் தேட வேண்டும்?”
No comments:
Post a Comment