Sunday 22 December 2013

க்ளவெர்ட்டா



பெண் ஓட்டுநர் க்ளவேர்ட்டா அந்த பேருந்தை அந்த மலைப்பாதையில் மிக லாவகமாக கையாண்டு கொண்டிருந்தாள். அன்று மாலை சுதந்திரப் பூங்காவில் தனது காதலனை சந்திக்கப் போகும் மகிழ்ச்சி உள்ளத்தில் பொங்கி வழிய உதட்டில் மெலிதாக ஒரு புன்னகையும் அரும்பியது.
     அந்த பேருந்தில் 24 பயணிகள் அமரலாம். ஆனால் 12 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இளைஞன் ராபர்ட் தனது முதல் கல்லூரி விடுமுறையைக் கழிக்க வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனது பின் இருக்கையில் முதியவர் மைக்கேல் தனது பேரனுக்கு வாங்கிய பொம்மையை இருக்கிப் பிடித்தவாறு பேரனின் கொஞ்சல்களையும், சிணுங்கல்களையும் நினைத்தவாறு அமர்ந்திருந்தார்.
     அந்த வளைவு கடந்த திருப்பத்தில் 4 பேர் சாலை ஓரத்தில் நின்று பேருந்தை நிறுத்த கை காட்ட, பேருந்து அவர்களை ஏற்ற சாலை ஓரமாக நின்றது. ஏறிய நால்வர் முகத்திலும் ஆணவம், திமிர், அலட்சியம் தாண்டவமாடியது. நன்றாகக் குடித்திருந்ததும் தெரிந்தது.
     ஏறிய உடனே க்ளவெர்ட்டாவைக் கண்டதும், அவள் அழகைக் கண்டு, “ஊஊஊஎனக் கூக்குரல் இட்டவாறு இருக்கையில் சென்று அமராமல், அவளிடத்தில் சென்று நின்று தகாத வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தனர்.
     க்ளவெர்ட்டா பதிலெதும் கூறாமல் அமைதியாக பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த நால்வரின் அட்டகாசம் எல்லை மீறத் தொடங்கியது. க்ளவெர்ட்டாவின் தோள்களில் கை வைப்பதும், கன்னத்தை சீண்டுவதும், உதட்டில் கை வைப்பதும், கொச்சை வார்த்தைகளில் பேசுவதுமென எல்லைகளை மீறிக் கொண்டிருந்தனர்.
     பேருந்தில் இருந்த அனைவரும் முகம் சுளித்தாலும் ஒருவருக்கும் எழுந்து அதை தட்டிக் கேட்க தைரியம் இல்லாமல் அமர்ந்திருக்க, ராபர்ட் தனது பொறுமையை கைவிட்டு, எழுந்து, “அந்த பெண்மணியை உபத்திரவம் செய்யாமல் பேருந்தில் இருந்து இறங்குகிறீர்களா?” எனக் கத்தினான்.
     உடனே அந்த நால்வரில் இருவர் அவன் அருகே வந்து, அவனை கண்டபடி திட்டி, முகத்திலும், உடலிலும் பலமுறை அடிக்க, ராபர்ட் அந்த வலியவர்களின் அடி பொறுக்காமல் விழுந்தான். விழுந்தவனின் நெஞ்சில் ஒருவன் தனது ஷூ காலைக் கொண்டு மிதிக்க, ராபர்ட்டுக்கு நினைவு தப்பியது.
     பெரியவர் மைக்கேல், தனது பங்குக்கு, “நீங்கள் செய்வது தவறு, இறைவன் உங்களை தண்டிக்காமல் விட மாட்டார்என வாய் விட்டு புலம்ப ஆரம்பித்தார். அந்த நால்வரில் ஒருவன் அவரிடத்தில் சென்று கன்னத்தில் பளீரென்று அறைந்து விட்டு, அனைவரையும் முறைத்துப் பார்த்தவண்ணம் மீண்டும் க்ளவெர்ட்டாவிடம் சென்று பேருந்தை நிறுத்துமாறு கூறினான்.
    
     பேருந்து ஓரமாக நிறுத்தப்பட்ட உடன், க்ளவெர்ட்டாவை கையைப் பிடித்து வலித்து இழுத்துக் கொண்டு இறங்க, பெரியவர் மைக்கேல் தனது இறுக்கையை விட்டு எழுந்து அந்த நால்வரையும் தடுக்க முயன்றார். அவரை நெட்டித் தள்ளிய நால்வரும் அவரையும் முகத்தில் குத்து விட்டு ஒரு இருக்கையில் அமர வைத்து கட்டிப் போட்டனர். பின்னர் அவள் கதறக் கதற சாலை ஓரத்தில் இருந்த புதர் மறைவில் கொண்டு சென்று அவளை கற்பழித்து விட்டு, பின்னர் மறுபடியும் க்ளவெர்ட்டாவுடன் பேருந்தில் ஏறிக் கொண்டு பெருந்தை ஓட்ட சொன்னர்கள்.
     பேருந்தில் க்ளவெர்ட்டா ஏறியதும் அந்த பெரியவர் மைக்கேலைப் பார்த்து, “உடனே பேருந்தை விட்டு இறங்குங்க” எனக் கத்தினாள். மைக்கேல், பெருந்தில் இருந்த அத்தனை பேரையும் ஒன்றும் சொல்லாமல் தன்னைப் பார்த்து இறங்கச் சொல்கிறாளே என திகைத்தார். ராபர்டையும் பேருந்தில் இருந்து இறக்கிவிடுமாறு அந்த நால்வரையும் பார்த்து சொன்னாள்.
     நால்வருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களை மிகவும் க்ளவெர்ட்டாவிற்குப் பிடித்துவிட்டது போலும் என நினைத்தபடி, மைக்கேலையும்,.ராபர்ட்டையும் பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர்.
     அங்கிருந்து புறப்பட்ட பேருந்து அந்த மலைப் பாதையின் அடுத்த திருப்பத்தில் திரும்பாமல் நேரே சென்று அதல பாதாளத்தில் தலை குப்புற வீழ்ந்து நொருங்கியது.

No comments:

Post a Comment