Monday 30 December 2013

ஏனி(ணி)ப்படி?

ஏனி(ணி)ப்படி?

உயிர் விந்தைக் கொடுத்து
உருவாக்கியவர்,
உள்ளத்துச் சிந்தனைகளை
ஒவ்வொன்றாய் செதுக்கியவர்,
உலக ஞானத்தை அவனுள்
புகுத்தியவர்,
முதல் கல்வி கொடுத்த
மாண்புமிகு ஆசான்,
அன்பையும், பண்பையும்
அதனுடன் வீரத்தையும்
கலந்து விதைத்த
அஞ்சா நெஞ்சன்.
தன் மகன் உயர்வைக் கண்டு
தான் உயர்ந்ததாய் எண்ணி
தற்பெருமைக் கொண்ட
தந்தையென்ற பேரில் வாழ்ந்த
பாசக்காரர்.
வாழ்வின் உச்சங்களை எட்ட
உயிர்த்துளிகளைச் சிந்தி
உழைத்து அவனை உயர்த்திட்ட
தன்னிலை மாறாத ஏணிப்படி!
அந்திமத்தில் தன் மகனின்
அரவணைப்பையிழந்து
மருமகளின் அம்புகளால் சிதைக்கப்பட்டு
முதியோர் இல்லங்களில்
உதிர்ந்த பூக்களில் ஒன்றாய்
ஏனிப்படி?

1 comment:

  1. அருமை! தற்செயலாக இந்தப் பக்கத்திற்கு வந்தேன். அறிவிப்புப் பலகை வழியாக எங்கள் மாணவரின் பார்வைக்கு கொண்டு சேர்ப்போம்.

    ReplyDelete